பிதாவினிடத்தில் கேட்டு கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
Everyone who has heard and learned from the Father comes to Me. (John 6:45)
Jn6:37,65; Jn5:38-40; Jn10:27; Jn16:14,15; Mt11:27; Mt16:17; Act16:14; 1Cor2:14; 2Cor3:15-17; Eph1:17; Eph4:20; Phil1:29; Phil2:13.
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே: ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.(யோவான் 6:45)
யோவான் 6:37,65; யோவான் 5:38-40; யோவான் 10:27; யோவான் 16:14,15; மத்தேயு 11:27; மத்தேயு 16:17; அப்போஸ்தலர் 16:14; 1கொரிந்தியர் 2:14; 2கொரிந்தியர் 3:15-17;எபே1:17;4:20;பிலி1:29;2:13.
கற்பவனே அவரிடம் வருகிறான்:
கிறிஸ்த வாழ்க்கை தான்தோன்றிதனமானதல்ல, கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்துவிலிருந்து ஆரம்பமாகிறது. அந்த வழ்வு நேரடியாக யாருக்கும் தரப்படவில்லை. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் போன்ற முன் அடியவர்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
கிறிஸ்தவ வாழ்க்கையை பார்த்து கற்றுகொள்கிறோம், கேட்டு கற்றுகொள்கிறோம். முன் ஓடியவர்களின் மாதிரிதான் கிறிஸ்துவை நம்மில் உயிருள்ளவராய் நிறுத்துகிறது.
நான் எனக்கு என் தகப்பனாரையும், என் தாய் சபையின் ஊழியரையுமே இன்று வரையிலும் முன்னிலை படுத்தி வருகிறேன். அதோடு சபைபிதாக்களில் ஜாண்வெஸ்லி, தாமஸ் கெம்பிஸ், கெலன் ஜ் உவைட் ஆகியோரின் வாழ்க்கை மாதிரிகளை பின்பற்றுவதுண்டு.
பவுல் நான் கிறிஸ்துவை பின்பற்றுவதுபோல நீங்கள் என்னை பின்பற்றுங்கள் என்றார்.
பிதாவிலிருந்து குமாரனுக்கு, குமாரனிலிருந்து ஊழியனுக்கு, ஊழியனிலிருந்து விசுவாசிகளுக்கு, விசுவாசியிலிருந்து உலகிற்கு கிறிஸ்தவம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
அந்தந்த நபருக்கு அவரவர் சார்ந்துள்ள அவரை கிறிஸ்துவுக்குள் பிறப்பித்த சபை போதகரே மாதிரியாக இருக்கிறார்.
கற்க விருப்பமில்லாமல் கொடுக்கவியலாது. கிறிஸ்தவ வாழ்க்கை தரப்பட்ட ஒன்று. உண்மையுள்ளவனிடமே அது ஒப்படைக்கப்படுகிறது. உன்னில் செய்யவேண்டியதை செய்து பின்சந்ததிக்குள் பாய்ந்தோடுகிறது.
கிறிஸ்த வாழ்க்கை வெறும் வார்த்தையல்ல, ஜீவனுள்ள ஒன்று. வாழ்வதற்காகவே வாழ்க்கை. பேசுவதற்காக அல்ல வாழ்க்கை.
வாழ்ந்துகாட்ட விரும்புங்கள். கற்றுகொள்ள முன்னணியம் வாருங்கள்.
கற்றுக்கொடுக்க கற்றுக்கொண்டு அனுபவியாமல் துணியாதீர்.
கிறிஸ்துவை தந்தவர் பிதாவே, கிறிஸ்துவை உன்னில் உயிராய் வைத்திருப்பவர் பரிசுத்த ஆவியே, அப்பொழுதுதான் சாயல் பரிணமிக்கும்.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு தந்துள்ள வாழ்க்கை முறையை கிறிஸ்துவின் வழியாகவே எங்களில் பரிணமிக்க செய்கிறீர். நாங்கள் இனி உம் குமாரனைபோல வாழ்ந்து ஜொலிக்க உதவி செய்யும். உம்மிடத்திலிருந்து கிருபை, அருள், ஞானம், மாதிரி பெற்று கிறிஸ்துவில் நிறைவு பெற உதவிடும்.