நான் உங்களுக்கு கற்பிக்கிறவைகளின்படி செய்வீர்களானால் என் சிநேகிதராயிருப்பீர்கள்.

நான் உங்களுக்கு கற்பிக்கிறவைகளின்படி செய்வீர்களானால் என் சிநேகிதராயிருப்பீர்கள்.

You are My friends if you do whatever I command you. (John 15:14)

John 2:5; John 13:17; John 14:21; 1John 5:3; Matthew 12:50; Luke 12:4; James 2:14-17,21-24; 2Chronicles 20:7; Isaiah 41:8.

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.  (யோவான் 15:14) 

யோவான் 2:5; யோவான் 13:17; யோவா ன்14:21; 1யோவான் 5:3; மத்தேயு 12:50; லூக்கா 12:4; யாக்கோபு 2:14-17,21-24; 2நாளாகமம் 20:7; ஏசாயா 41:8.

என் சிநேகிதர்:

மோசேயின் பிரமாணங்களைக் கைக்கொண்டு பின்பற்றி நடப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவர் என்பது ப. ஏ முறைமை. அதைபோலவே கர்த்தராகிய இயேசு கற்பித்துள்ள கற்பனைகளை கைக்கொண்டு பின்பற்றி நடக்கிற சீஷர்களே அவரின் சிநேகத்துக்குரியவர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்காகவே தம் ஜீவனையும் கொடுத்துள்ளதாக கூறுகின்றார்.

பிரமாணங்களும், கட்டளைகளும், கற்பனைகளும் மனுக்குலத்துக்காக கொடுக்கப்பட்ட தேவ நியமங்கள். பாவம் பரிகரிக்கப்படவும், சாத்தான் மேற்கொள்ளப்படவும், பரிசுத்தமுள்ள சந்ததி ஜெநிக்கப்படவும், தேவ இராஜ்யம் ஸ்தாபிக்கப்படவும் இவைகள் கொடுக்கப்பட்டன. தேவனுக்கு பயப்படுகிற எவரும் அவருடைய கட்டளைகளை பேதம் பார்க்காது அவைகளுக்கு கீழ்படிவார்கள். இது இஸ்ராயேலருக்காக கொடுக்கப்பட்டது. எனவே இவைகளை நான் பின்பற்ற இயலாது என்று கூற இயலாது. ஏனெனில் பு. ஏ ல் கிறிஸ்துவின் போதனைகள் யாவும் யூதமதம் சார்ந்த சீஷர்களுக்குதான் போதிக்கப்பட்டது. ப. ஏ கட்டளைகளும் இயேசுவின் கட்டளைகளும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றது. அவர் பரிபூரணமாக பிதாவின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து பிதாவின் செல்லகுமாரனாக மாறினார். நாமும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்படிந்து இயேசுவுக்கு சிநேகிதர் ஆகிறோம்.

அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோர் ஜாதி, மொழி, இனம், நிறம், நாடு, அந்தஸ்து பேதங்களை பார்க்காது முன்னேறுவர். அப்படிபட்டவர்களே அவரின் சிநேகிதர். அன்று அப்போஸ்தலர்கள் இவ்வித வேறுபாட்டைக் கவனத்தில் கொண்டிருந்தால் புறஜாதியாகிய நாம் இயேசுவின் சிநேகிதராகவும் தேவனுடைய பிள்ளைகளாகவும் ஆகியிருக்க முடியாது. எனவே அவரது கட்டளைகளைக் கைக்கொண்டு அவரது சிநேகிதராவோம்.

கட்டளைகளைக் குறித்து பேதம் பாராதீர்.. கீழ்படிவதிலே மாத்திரம் கவனம் கொள்வீர்..

பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். 1யோவான் 3:21-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME