அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.
Now he who keeps His commandments abides in Him, and He in him. (1John 3:24)
John 14:21-23; John 15:7-10; Levitics 18:5; Deu 5:10; Psalms 25:10; Matthew 28:20; John 14:15; 1John 2:3,5.
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார். அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 3:24)
யோவான் 14:21-23; யோவான் 15:7-10; லேவியராகமம் 18:5; உபாகமம் 5:10; சங்கீதம் 25:10; மத்தேயு 28:20; யோவான் 14:15; 1யோவான் 2:3,5.
நிலைத்திருக்கிறான்.
இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளை கைக்கொள்ளுகிறவன் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறான். இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளைக் கைக்கொண்டு பிதாவில் நிலைத்திருந்தார். இயேசு கிறிஸ்துவைப்போல நாம் வாழ பிரயாசப்பட்டால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களைப் பின்பற்ற வேண்டும். அவருடைய உபதேசங்கள் பாரமானவைகளல்ல. என் நுகம் மெதுவாயும் என் சுமை லகுவாயும் இருக்கிறது என்று மத்தேயு 11:30 ல் இயேசு கூறுகின்றார். என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு தாயும் சகோதரருமாக இருக்கிறார்கள் என்று மத்தேயு 12:50 ல் மேலும் இயேசு கூறுகின்றார். கிறிஸ்துவிலே நிலைத்திருப்பதற்கு , கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதற்கு அடிப்படை உண்மை அவருடைய வார்த்தைகளை கைக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
பாரமானதும் , கடினமானதும் ஆகிய நியாயபிரமாணத்தை நிறைவேற்றுவதில் இயேசு கிறிஸ்து ஆர்வமாயிருந்தார். இயேசு கிறிஸ்துவுக்கு பிரமாணங்கள் கடினமானதாக தெரியவில்லை. ஏனெனில் அவரில் ஆவியானவர் வாசம் செய்தார். பிதாவை தன் உயிர் மூச்சாகக் கொண்டார். அவரின்றி தானில்லை என்ற உண்மையை உயிரோட்டமாகக் கொண்டிருந்தார். சிலுவைகூட அவரது உறுதிப்பாட்டை குலைத்துப்போட முடியவில்லை. சிலுவையிலும் பிரமாணத்தின் தன்மை சிதையாதவாறு நடந்துக் கொண்டார். ஆனால் அப்படிப்பட்ட இயேசுவை கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் இயேசு நடந்தபடியே நடக்க இயலாத காரணம் என்ன?
சத்தியம் ஒருபோதும் மாறாது. சத்தியம் கிறிஸ்துவையும் பிதாவையும் பரிசுத்த ஆவியையும் இணைத்தேக் கொண்டுள்ளது. பிதாவானவர் கொடுத்த பிரமாணத்தின் சடங்குகளை அகற்றி அல்லது தன்னில் நிறைவேற்றி அந்த பிரமாணத்தை லகுவாக்கி நமக்கு தந்துள்ளார். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர் சடங்குகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. ஆனால் சடங்கு சாராத கட்டளைகளை கைக்கொண்டுதானாக வேண்டும். சத்தையத்தை தன்னுள் கொண்டுள்ள இயேசுவை தனக்குள் கொண்டிருப்பதுவே சத்திய வாசகன் ஆவான். வசனம் உன்னில் நிலைத்திருந்தால் அவர் அங்கேயிருப்பார்.
கேள்வி. கட்டளையை மீறுவது பாவமாகும் என்பதின் பொருள் என்ன?
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1யோவான் 2:1-6.