ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்தான்… ஆட்டை கண்டான்…. அதை தன் குமாரனுக்கு பதிலாக தகன பலியிட்டான்.
ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். (ஆதியாகமம் 22:13)
ஆதியாகமம் 22:1-18; சங்கீதம் 40:6-8; ஏசாயா 30:21; 1கொரிந்தியர் 10:13; 1கொரிந்தியர் 5:7,8…..
ஈசாக்கு…….முதற்பரிகார நிழல்……ஆதியாகமம் 22:1-18…..
ஈசாக்கு பலியிடப்படவில்லை. அவனுக்கு பதிலாக ஒரு ஆடு பலியடப்பட்டது….இயேசு தாமே பலியிடப்பட்டார்…..
ஈசாக்கு மோரியா மலைக்கு கொண்டு செல்லப்பட்டார்…இயேசு கொல்கொதா மலைக்கு கொண்டு செல்லப்பட்டார்…..
ஆடு…..
இது முதற்பரிகார ஆடு……
ஈசாக்குக்கு பதிலாக பலியிடப்பட்ட ஆடு…
1.ஏறிட்டுப்பார்த்தால் கிடைக்கும்….இது ஆண்டவர் சொல்லிக்கொடுத்த முறை…ஆதியாகமம் 13:14……
2.கொம்புகள் சிக்கிய ஆட்டுகடா…….3.எஜமானிடமிருந்து விடுபட்ட ஆடு….
4.தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட ஆடு….
இது தற்செயலான நிகழ்வல்ல…
தேவனால் தீர்மானிக்கப்பட்டது….
– மகனை திரும்ப கொடுத்தப்போது ஆர்வத்தினால் மெய்மறந்து போகிறானா என்று பார்க்க முன்னதாக ஆட்டை காண்பிக்கவில்லை…
– தேவனுக்கு நன்றி செலுத்த விரும்பினான்…
அதற்காய் திரும்பினான்…
அதனால் கிடைத்தது.
நன்றி சொல்ல முன்வரும்போதுதான் தேவன் நமக்காய் ஆயத்தம் செய்துள்ளதை நாம் காண முடியும்…….
5.இரத்தம் சிந்தி பலியாகி மரித்த ஆடு….
இயேசு சிலுவையிலே பலியிடப்பட்டார்….
பரிகாரபலி மூலமாகவே….
நம் பாவம் நீங்கியது….
தேவனோடு இணைந்துக் கொண்டோம்…
ஆடு பலியிடப்பட்டு ஈசாக்கு ஆசீர்வாதம் பெற்றான்….
கிறிஸ்து பலியிடபட்டு நாம் ஆசீர்வாதம் பெற்றோம்…