எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள்

எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள்.

I love the Father, and as the Father gave Me commandment, so I do. Arise, let us go from here. (John 14:31)

Psalm 40:8; Hebrew 5:7,8; Hebrew 12:2,3; John 18:1-4; Romans 15:3; Galathians 1:4.

நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். (யோவான் 14:31)

சங்கீதம் 40:8; எபிரெயர் 5:7,8; எபிரெயர் 12:2,3; யோவான் 14:1-4; ரோமர் 15:3; கலாத்தியர் 1:4.

எழுந்திருங்கள்:

ஆண்டவராகிய இயேசு தமது சீஷர்களை அழைத்துக் கொண்டு போகிறார். கெத்சமனே தோட்டத்துக்கு நேராக போகிறார்கள். இன்றைய நாளில் எழுந்திருங்கள் என்ற தலைப்பில் உங்களோடு இணைந்து தியானிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
எழுந்திருங்கள்……

எழுந்திருங்கள் பயப்படாதேயுங்கள் மத்தேயு 17:7.
எழுந்திருங்கள் காட்டிக்கொடுக்கிறவன் வந்து விட்டான். மத்தேயு 26:46.

சிறு பெண்னே எழுந்திரு. மாற்கு 5:41.
எழுந்திரு இயேசு உன்னை அழைக்கிறார். மாற்கு 10:49.
வாலிபனே எழுந்திரு. லூக்கா 7:14.
எழுந்திருந்து ஜெபம் பண்ணுங்கள். லூக்கா 22:46.
எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட.. யோவா5:8.
பேதுருவே எழுந்திரு அடித்து புசி. அப்போஸ்தலர் 10:13.
எழுந்திரு என்று அவனை எழுப்பினான். அப்போஸ்தலர் 12:7.
தூங்குகிற நீ மரித்தோரை விட்டு எழுந்திரு. எபேசியர் 5:14;நீதி6:9.
எழுந்திருந்து என் வார்த்தைகளை கேளுங்கள். ஏசாயா 32:9.
தூசியை உதறிவிட்டு எழுந்திரு. ஏசாாய 52:2.
எழுந்திருங்கள், சீயோனிலே நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்கு போவோம். எரேேமியா 31:6.
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு. புலம்பல் 2:19.
நீ எழுந்து பள்ளதாக்குக்கு போ. எசேக்கியேல் 3:22.
எழுந்திருந்து போங்கள். இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல. மீகா 2:10.

எழுந்து ஆண்டவரோடு நடக்க வேண்டிய காலம் வந்து விட்டது. துணை செய்வார் ஒருவரும் இல்லை. இனி அவரே நமக்கு துணையாயிருக்கிறார்.. அவரோடு நடக்க அவரோடு பணி செய்ய புறப்படுவோம்.

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13:11-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME