உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்

உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.

Most assuredly, I say to you, one of you will betray Me. (John 13:21)

John13:2,18; John 17:12; Matthew 26:21; Mark14:18; Luke 22:21,22; Acts 1:16,17; 1John 2:19.

இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். (யோவான் 13:21)

யோவான் 13:2,18; யோவான் 17:12; மத்தேயு 26:21; மாற்கு 14:18; லூக்கா 22:21,22; அப்போஸ்தலர் 1:16,17; 1யோவான் 2:19

காட்டிக் கொடுப்பான்:
யூதாஸ் கர்த்தராகிய இயேசுவை காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்திருந்தும் அவனை தமது சீஷனாகவும், பொக்கிஷதாரனாகவும் வைத்துக்கொண்டார். உன் எதிராளியை அருகில் வைத்துக்கொள் என்ற வாக்கு இதன் அடிப்படையில் தோன்றியிருக்கலாம். இயேசுவோடு எல்லா நன்மைகளையும் அனுபவித்துவிட்டு அவரை காட்டிக்கொடுத்தான். குருவாகவும் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தும் அவரை காட்டிக் கொடுத்தான்.

ஏன் யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தான்?
பணத்தின்மேல் – ஐசுவரியத்தின்மேல் வாஞ்சையும், பேராசையும் உடையவனாய் இருந்ததினால் இயேசுவை காட்டிக் கொடுத்தான். ஏராளமாய் கிடைக்கும் என்று நினைத்து செய்த செயல் அவனுக்கு எதிர்மாறாக போயிற்று. பிரமாணத்தை அறியாது ஏமாந்துவிட்டான்.
அவன் இயேசுவை காட்டிக் கொடுப்பதற்காகவே பிசாசினால் உருவாக்கப்பட்டவன். காட்டிக் கொடுப்பவன் வெளியிலிருந்தல்ல உள்ளிருந்தே வரவேண்டும் என்பதினால் அவனை சேர்த்துக் கொண்டார். விவிலிய வாக்கு நிறைவேற அவன் காட்டிக் கொடுத்தான்.

காடிக்கொடுத்தல் எதைக் குறிக்கின்றது?
துரோகம், வஞ்சனை, ஏமாற்றுதல், கூட இருந்து குழி பறித்தல், கேடான சிந்தை, தன்னிஷ்டத்துக்கு வளைக்க முயற்சித்தல், பொய்யான கீழ்படிதல், விசுவாசமின்மை, பிசாசின் எண்ணங்களுக்கு இடம் கொடுத்தல், நல்லவனை போல நடித்தல், மாய்மாலம் போன்ற பல பொருள்களை தருகின்றது.

அறியாமல் காட்டிக்கொடுப்பவர்களுமுண்டு, அறிந்து காட்டிக்கொடுப்பவர்களும் உண்டு, கோபத்தினிமித்தம் எரிச்சலினிமித்தம் காட்டிக்கொடுப்பவர்களும் உண்டு, தனக்கு நன்மை உண்டாக வேண்டி காட்டிக்கொடுப்பவர்களும் உண்டு. எப்படியாயினும் காட்டிக் கொடுப்பவன் பிறவாதிருந்தானானால் நலமாயிருக்கும். அவன் பிறந்து கூடவே இருப்பானானால் அவனுக்கு ஐயோ.

இயேசு ஆவியில் கலங்கினவராய் உள்ளம் உடைந்தவராய் நொறுங்கிப்போனவராய் காணப்பட்டார். தாம் உண்டாக்கிய மனிதன் அற்ப சுகத்துக்காக வேண்டி துரோகம் இளைக்கின்றானே என்று அறிந்தவராய் நொந்துப்போனார்.

இப்படிப்பட்ட யூதாஸ் போன்றவரை சந்தித்திருப்பாயானால் உனக்கு வெற்றியின் பாதை உண்டு என்பதையும் மறவாதே.

சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும். மத்தேயு 26:20-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME