நான் போகிற இடத்துக்கு பிற்பாடு என் பின்னே வருவாய்.
Jesus answered him,Where I am going you cannot follow Me now, but you shall follow Me afterward. (John 13:36)
John 13:33; John 14:4,5; John16:17; John 21:21,18-19,22; 2 Peter 1:14; Psalms 24:3.
சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். (யோவான் 13:36)
யோவான் 13:33; யோவான் 14:4,5; யோவான் 16:17; யோவான் 21 :21,18,19,22; 2பேதுரு 1:14; சங்கீதம் 24:3.
பிற்பாடு வருவாய்:
இயேசுகிறிஸ்துவின் பிரதான சீடனாகிய பேதுரு எதை விரும்புகிறானோ அதை செய்ய வேண்டும் என்ற ஆர்வமுடையவன் என்பதை இயேசு அறிவார். கடலின்மேல் நடக்க விரும்பினான். இயேசு மரிக்கக் கூடாது என்றான். நான் உம்மை பின்பற்றி வருவேன் என்று கூறுகின்றான். இயேசுவோ இப்பொழுது உன்னால் என்னை பின்பற்ற முடியாது, ஆனாலும் பின்னாட்களில் என்னை முழுமையாய் பின்பற்றுவாய் என்கிறார். இப்பகுதியானது இயேசுவின் மரணத்தை பேதுருவினால் தடுக்க இயலாது என்றும், இயேசுவோடு கூட மரிப்பதற்கும் இயலாது என்றும் கூறுகின்றார். ஆனால் பின்னாட்களில் தனது மரணம் உயிர்ப்பு பரமேறுதலுக்கு பின்பு பேதுரு இயேசுவை முழுமையாய் பின்பற்றுவான் என்று கூறுகின்றார்.
இயேசுவோடு இயேசுவை பின்பற்றுவதாக கூறினாலும் தன்னை மறுதலிக்க போவதை இயேசு அறிந்ததினாலேதான் இப்படி கூறினார்.
தேவன் நமது முன்னிலையையும், இன்னிலைமையையும், பின்னிலைமையையும் நன்றாக அறிவார். ஆகையால் நாம் நம் விருப்பங்களின்படி வாழ்வதை நிறுத்திவிட்டு அவருடைய ஆலோசனைபடி வாழ்வதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
அவருக்கு ஆலோசனைக் கொடுப்பதையோ, அவரைபோல் பிறர் முன்பாக தற்புகழ்ச்சிக்காக நடந்து கொள்வதையோ அவர் உய்த்து ஆராய்ந்து நம் பின்னிலைமையை அறிந்து வெளிப்படுத்துவார்.
எல்லாம் அவர் விருப்பப்படியே இயங்குகின்றது. எல்லாம் அவர் சொல்படியே நடக்கின்றது. நாமும் அவர் விருப்பப்படி வாழ்ந்து அவர் சொல்படி கீழ்படிந்து நடப்போமெனில் அவரும் மகிமைப்படுவார் . நாமும் ஜெயிக்கிறாவர்களாவோம், ஜெயிப்பிப்பவர்களாகவும் ஆவோம்.
பின்னால் நடப்பதை அறியும் அவரோடு இணக்கமாய் நடப்போம்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ரோமர் 11:29-36.