சத்தியவான் எவரும் என் சத்தம் கேட்கிறார்.
Everyone who is of the truth hears My voice. (John 18:37)
John 7:17; John 8:47; John 10:26,27; Romans 10:17; 1Peter 1:22; 1John 3:18-24; 1John 4:6; 1John 5:20.
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான், சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன், சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:37)
யோவான் 7:17; யோவான் 8:47; யோவான் 10:26,27; ரோமர் 10:17; 1பேதுரு 1:22; 1யோவான் 3:18-24; 1யோவான் 4:6; 1யோவான் 5:20.
சத்தியவான்:
சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர் சத்தியவான். சத்தியமாக வந்த இயேசுவை, சத்தியத்தை அறிவித்த இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கின்றவர்களே சத்தியவான் எனப்படுகின்றார். சத்தியத்தை அறிந்து சத்தியத்தினாலுண்டாகும் விடுதலையை அனுபவைக்கிறவரே சத்தியவான். சத்தியமாக வந்த இயேசுவையும், இயேசு உபதேசித்த சத்தியத்தையும் பிரசங்கிக்கிறவரும், பகிர்ந்துக் கொள்கிறவருமே சத்தியவான்.
இப்படிபட்ட சத்தியவான்கள் இயேசுவின் குரலைக் கேட்க ஆயத்தமுள்ளவர்கள். ஆர்வமுள்ளவர்கள். வாஞ்சிக்கிறவர்கள். வேறு குரலுக்கு செவி சாய்க்காதவர்கள். இவர்கள் சத்தியம் இன்னதென்று அறிந்திருந்ததினால் எல்லா சத்தத்தையும் சத்திய சத்தம் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சத்திய சத்தத்தை அறிந்து பழகியிருப்பவரே சத்தியத்திற்கு செவி கொடுப்பார்கள். பழைய ஏற்பாட்டின் உண்மை தன்மையை அறிந்தவரே சத்தியமாக வந்த இயேசுவின் சத்திய சத்தத்திற்கு செவி கொடுப்பர்.
சத்தியம் வந்து தங்கும் மனம், நெஞ்சம், இருதயம் உள்ளவர்களே இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்பார்கள். சத்திய சத்தம் தெருக்களிலும், மலைகளிலும், குன்றுகளிலும், குகைகளிலும், ஓடைகளிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும் கேட்கபடுகின்றது. சத்தியத்தின் மீதுள்ள தாகம் உள்ளவர்களே சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள்.
இயேசுவின் காலத்தில் அசத்தியம் எங்கும் நிரம்பி எல்லார் இருதயத்தையும் நிறைத்திருந்ததினால் சத்தியத்தின் சத்ததிற்கு செவிகொடுப்போர் குறைவாகவே இருந்தனர். அதைபோன்றதொரு காலமே இதுவாகும். கொள்ளைநோய்கள், காட்டுதீக்கள், இயற்கை பேரழிவுகள் உண்டானபோதிலும் சத்தியத்தின் சத்தத்திற்கு செவிகொடுக்காதபடிக்கு மனிதர்களின் இருதயம் அசத்தியத்தினால் நிரம்பியிருக்கின்றது. வதந்திகளால் ஒருவர் நிரப்பட்டபின்பு அவரை உண்மைசெய்தியை ஏற்றுக்கொள்ள வைப்பது கடினமாயுள்ளதை போலவே.
சத்தியத்திற்கு செவிகொடுத்து சத்தியத்தை பின்பற்றும் காலமே எழுப்பதலின் காலமாகும். எப்பொழுது தேவனை அறியாதவர்கள் தேவனுடைய குமாரனின் சத்திய சத்தத்திற்கு செவிகொடுக்க ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதுதான் எழுப்புதல் ஆரம்பமாகும். அப்படியானால் மனித உள்ளங்களில் உள்ள அசத்தியம் மறைந்து சத்தியம் உட்புகும்படியாக தேவனுடைய மனிதர்கள் சத்தியத்தை பிரசங்கிக்கவோ, சத்தியத்திற்கு சாட்சிகளாய் நிற்கவோ, சத்தியத்தினிமித்தம் பாடுபடவோ, சத்திய பரவலுக்காய் ஜெபிக்கவோ தங்களை ஒப்புக்கொடுப்பது நல்லது.
சத்திய மனம், சத்திய உதடு, சத்திய பாதை தன்னகத்தே கொண்டுள்ளவர்களினால் சத்தியம் இன்னும் உயிருடன் இருக்கின்றது.
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 3யோவான்1:1-4.
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம். 1யோவான் 3:18,19,22-24.