நான் உலகை இரட்சிக்க வந்தேன்

நான் உலகை இரட்சிக்க வந்தேன்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47)

பாவிகளை இரட்சிக்க இயேசு உலகத்தில் வந்தார். 1தீமோத்தேயு 1:15.
சிட்சை கொடுக்க முடியும், ஆனாலும் இரட்சிக்க வந்தார். யோவான் 3:17.

பாவிகளை நரகில் தள்ள முடியும், ஆனாலும் இரட்சிக்க வந்தார். ஏசாயா13:9.பாவம் செய்தவர்களை வேண்டாமென்று ஒதுக்கவும், வெறுக்கவும் செய்ய முடியும். அப்படியிருந்தும் நேசித்து இரட்சிக்க வந்தார். சங்கீதம் 1:5.

உலகை இரட்சிக்க வந்த காரியத்தில் 3 உண்மைகள் உள்ளன.

  1. கிருபை மகனை தந்தது. கிருபையால் தேவ மகன் கொடுக்கப்பட்டார். எபேசியர் 1:4,5,6. பாவத்தினிமித்தம் வெளியேற்றப்பட்டவனை மறுபடியும் தம்மிடம் சேர்க்க விரும்புவதே கிருபை.பாவம் செய்தவனை தண்டித்ததினிமித்தம் கர்த்தர் பட்சிக்கிற அக்கினி என்று அறிந்தோம்.பாவம் செய்தவனை இரட்சிப்பதினிமித்தம் தேவன் கிருபை, இரக்கமுள்ளவர் என்று அறிகின்றோம்.
    தமது மிகுந்த கிருபையினாலே தேவன் தமது ஒரே மகனை இந்த உலகிற்கு தந்தார்.
    இயேசு இந்த உலகத்தில் குழந்தையாக பிறந்தது கிருபையே.
  2. அன்பு ஜீவனை தந்தது. தேவ அன்பு மகனை நமக்காக பலியாக்கியது. கிறிஸ்துவின் அன்பு தம்மை பலியாக்கியது. யோவான்3:16. 1யோவான்3:16. யோவான்15:13.
    இரத்தம் சிந்தி நம்மை மீட்டார்.தமது இரத்தத்தைக் கொண்டு கழுவினார்.
  3. விசுவாசம் இரட்சிப்பை தந்தது. எபேசியர் 2:8.
    தேவனையும் விசுவாசிக்க வேண்டும்.குமாரனையும் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் இரட்சிக்கப்பட முடியும். நமக்குள் விசுவாசம் வந்ததால் நம்மில் இரட்சிப்பு உண்டாயிற்று. ரோமர் 10:9,10,17.இரட்சிப்பு நம்மில் உண்டானதினால் நாம் தேவ பிள்ளைகளானோம். யோவாான் 1:12.தேவ பிள்ளைகள் தேவனை தொழுதுகொண்டு இரட்சிப்பில் தொடர்கிறார்கள். ரோமர்10:13.இரட்சிக்கபட்டவர்கள் சபைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அப்போஸ்தலர 2:47.

ஆம் பாவிகளை இரட்சிக்க இயேசு பிறந்தார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME