உலகம் அவரை அறியாமலும், காணாமலும் இருப்பதால் பெற்றுக்கொள்ளவியலாது.
Spirit of truth, whom the world cannot receive, because it neither sees Him nor knows Him. (John 14:17)
1Corinthians 2:14; 1Corinthians 10:1-6; John 3:8; Romans 8:6-8; John 1:10,11; John 20:9,14; John 21:4.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். (யோவான் 14:17)
1கொரிந்தியர் 2:14; 1கொரிந்தியர் 10:1-6; யோவான் 3:8; ரோமர் 8:6-8; யோவான் 1:10,11; யோவான் 20:9,14; யோவான் 21:4.
ஆவியைப் பெறாதவர்கள்:
உலகத்தில் தேவனுடைய ஆவியும் சாத்தானுடைய ஆவியும் உண்டு. எனவே தான் விவிலியம் தேவனுடைய ஆவியைப் பரிசுத்த ஆவி என்றும், சாத்தானுடைய ஆவியை அசுத்த ஆவி என்றும் அழைக்கின்றது. அசுத்தமாய் வாழ்கிறவன் சாத்தானையும், மாம்சத்தையும், உலகத்தையும் பின்பற்றுகிறவனாயிருந்து மேலும் மேலும் அசுசியாகின்றான். அப்படிபட்டவன் உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பி நரகத்துக்கு உட்படாதிருக்க வேண்டுமானால் பிதாவினால் அனுப்பபட்ட தேவகுமாரனின் இரத்தத்தால் மீட்கப்பட்டு அவருடைய சரீரமாகிய சபைக்குட்பட வேண்டும். அவனுக்குள் தேவன் தமது பரிசுத்த ஆவியை அனுப்பி தேவபுத்திரனாக விளங்கச் செய்கின்றார். அவன் பிதாவாகிய தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறான்.
இவ்விதமாய் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படாதவன் அசுத்த ஆவியை உடையவனாய் இருப்பதினால் அவனுக்குள் இருள் குடிகொண்டுள்ளது. இருள் அவனுக்குள் வாசமாய் இருப்பதினால் ஒளி இன்னதென்றும், நன்மை இன்னதென்றும், தெரியாமல் சகலவிதமான அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கிறவனாயிருக்கின்றான். இயேசுகிறிஸ்துவின் முகத்திலிருந்து தோன்றும் அறிவாகிய ஒளி அவனுக்குள் பிரவேசிக்க கூடாதபடிக்கு அவனுடைய வாசல்கள் யாவும் அடைக்கப்பட்டிருக்கின்றன.
பாவம் குடிகொள்ளும் மனிதனிலும், மாம்சீக சிந்தைக்கு இடமுண்டாகும் இருதயத்திலும், கீழ்படியாமையும் கோபமும் கசப்புகளும் குடிகொண்டுள்ள மனதிலும் தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ண இயலாது. அவனுக்குள் தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவியே – சவுலுக்குள் காணப்பட்டதுபோல குடி கொண்டிருந்து நல்லவர்களைப்போல நடந்துக் கொள்ள செய்யும். அப்படிபட்ட சிந்தைகளுக்குள் அசுத்த ஆவியினால் தொடப்படும்போது பாம்பு படம் எடுத்து ஆடுவதைபோல நடந்து கொள்ளச் செய்யும்.
உள்ளான மாற்றமே பரிசுத்த ஆவியின் வாழ்விடம். பரிசுத்த ஆவியின் வாழ்விடத்தினிமித்தம் வெளிபுறத்தில் புதியவிதமான நடவடிக்கைகள் காணப்படும்.
பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 1யோவான்4:1-6.