உலகத்தில்

இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

For God so loved the world that He gave His only begotten Son. (John 3:16)
Jn3:35; Jn5:20; Jn10:17; Jn14:23; Jn15:9; Jn17:23,24; Ro5:5,8; Ro8:37; 2Co13:14; Eph2:4; Tit3;4; 1Jn2;5; 1Jn3:17; 1Jn4:7,11,19.

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3:16)

யோவான் 3:35; யோவான் 5:20; யோவான் 10:17; யோவான் 14:23; யோவான் 15:9; யோவான் 17:23,24; ரோமர் 5:5,8; ரோமர் 8:37; 2கொரிந்தியர் 13:14; எபேசியர் 2:4; தீத்து 3;4; 1 யோவான் 2;5; 1 யோவான் 3:17; 1 யோவான் 4:7,11,19.

அன்பு பலவகைப்படும்:
– தேவன் குமாரனில் காட்டிய அன்பு.
– தேவன் இவ்வுலகில் காட்டிய அன்பு.
– தேவன் தம்மை நம்புகிறவர்களில், நேசிக்கிறவர்களில் காட்டிய அன்பு.
– கிறிஸ்து பிதாவிடம் காட்டிய அன்பு.
– கிறிஸ்து உலகிற்கு வெளிபடுத்திய அன்பு.
– கிறிஸ்து தம்மை நம்புகிறவர்களிடம் காட்டும் அன்பு.
– பரிசுத்த ஆவியின் சிநேகம்.
– ஒருவரிலொருவர் காட்டும் அன்பு.
– கணவன் மனைவியிடம் காட்டும் அன்பு.
– பெற்றொர் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு.
– நண்பர்களிடையில் உள்ள அன்பு.

தேவ அன்பு.
இந்த அன்பு தேவனாலே உண்டாயிருக்கிறது. 1 யோவான் 4:7
அது முந்தி செயல்பட்ட அன்பு. 1 யோவான் 4:19
தேவன் தமது குமாரனை உலகிற்கு தந்து அன்பை வெளிபடுத்தினார்.
இதில் அன்பின் அளவு வரையறுக்கபட்டது.
உயரிய அன்பு எது என்றும் காட்டப்பட்டது.
அன்பின் இலக்கணமும் ஏற்படுத்தபட்டது.

தேவ அன்பு யாவருக்கும் பொதுவானது. இந்த பொதுவான அன்பினிமித்தம் யார் எப்படிபட்டவராயிருந்தாலும் அவரை அணுகலாம். No Partiality, No Differentiation. இந்த அன்பு ஒருவரை சபைக்குள் வரவைக்கிறது.

தேவ அன்பு பிரத்தியேக அன்பாகவும் வெளிபட்டது. எவர் ஒருவர் அவரின் கட்டளைகளை பின்பற்றி அவர் அனுப்பிய குமாரனின் இரத்தத்தினால் மீட்கபட்டு, தேவனின் ஆவியை பெற்று அவரில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களில் பிரத்தியேக அன்பு உண்டாயிருக்கும். இது கிறிஸ்துவில் வாழ்வது. இந்த அன்பு சபைக்குள் வந்தவரை கிறிஸ்துவுக்குள் வாழ வைக்கிறது.

தேவ அன்பு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதோடும், கட்டளைகளை பின்பற்றுவதோடும் இணைந்துள்ளது.

தேவ அன்பு தம்மிடம் இருப்பதை கொடுக்கிறது. கிறிஸ்துவின் அன்பு தன்னையே கொடுக்கிறது.
தேவன் தம் குமாரனை நேசித்தார். தம் மடியில், அருகில் செல்லபிள்ளையாக வைத்திருந்தார். ஒரே பேறானவராக வைத்திருந்தார். தேவன் பாவிகளை நேசித்தார். பாவத்தை வெறுப்பவர் பாவியை நேசித்தார். தம் செல்லபிள்ளையை பாவிகளுக்காக கொடுத்து அன்பின் இன்னொரு பாகத்தை வெளியிட்டார்.

நாம் நம் உறவுகளை நேசிக்கிறோம். ஆனால் பாவிகள் இரட்சிக்கபட நமது உறவுகளை இழந்து பாவிகள் மேல் பரிவு கொண்டு அவர்களிடத்தில் அன்பு காட்டுகிறோம். அவர்களை இரட்சிப்புக்குள் நடத்துகிறோம்.

தேவ அன்புக்கு இணை எதுவும் இல்லை. இந்த அன்பை காதலோடும், பாரி வள்ளலோடும், மற்றுள்ள அன்போடும் ஒப்பிடலாகாது.

தேவனே அன்பை துவக்கினார். அவரே அன்பை முடித்து வைப்பார்.

கர்த்தாவே, உம் அன்பை உம் குமாரனை எங்களுக்கு தந்து எங்களை மீட்டதினால் அறிந்து கொண்டோம். அந்த அன்பை நாங்களும் சுமந்து கொண்டு இரட்சிக்கபட வேண்டியவர்களிடம் அன்பு செலுத்தி அவர்களை இரட்சிப்புக்குள் வழி நடத்த உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME