உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரியாமலும் இருப்பான்

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரியாமலும் இருப்பான்.

And whoever lives and believes in Me shall never die. Do you believe this? (John 11:26)

Jn3:15-18; Jn4:14; Jn5:24; Jn6:50,54,58; Jn8:52,53; Jn9:35; Jn14:10; Mat9;28; Mk9:23; Rom8:13; 1Jn5:10-12.

உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். (யோவான் 11:26)

யோவான் 3:15-18; யோவான் 4:14; யோவான் 5:24; யோவான் 6:50,54,58; யோவான் 8:52,53; யோவான் 9:35; யோவான் 14:10; மத்தேயு 9;28; மாற்கு 9:23; ரோமர் 8:13; 1யோவான் 5:10-12.

மரியாமல் இருப்பான்.
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று கூறிய இயேசு இங்கே உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றும் மரியாமல் இருப்பான் என்று கூறுகின்றார். முந்தியதை எளிதாக புரிந்துகொண்ட நாம் பிந்தியதை புரிந்து கொள்வது நமக்கு சற்று கடினமாக உள்ளது.

இந்த வசனம் சரீரத்தில் மரியாமலிருப்பதைக் குறித்து குறிப்பிடுகிறதா அல்லது ஆத்துமாவில் மரியாமலிருப்பதைக் குறித்து குறிப்பிடுகிறதா என்று நாம் அறிந்து கொள்வது கடினமே. விசுவாசிக்கிறவன் ஆத்துமாவில் மரியாமலிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சரீரத்தில் அவன் மரியாமலிருக்க முடியுமா? அப்படி யாராவது மரியாமல் இருந்துள்ளனரா? என்ற கேள்விகளை கேட்கும்போது ஒருசில உண்மைகளை நாம் அறிய முடிகின்றது.

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். விசுவாசம் ஆத்துமாவை பிழைப்பூட்டுவது மட்டுமல்ல, சரீரத்தையும் பிழைப்பூட்டும். அதே நேரத்தில் சரீரத்தை மரணத்துக்கு ஒப்புக்கொடாமலும் இருக்கும். சரீரத்தையும் ஆத்துமாவையும் காக்கும்.

ப.ஏ ல் ஏனோக்கு, எலியா போன்றவர்கள் மரணத்தைக் காணாமல் எடுத்து கொள்ளப்பட்டார்கள். 1தெசலோனிக்கேயர் 4:17 ல் உயிரோடிருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளப்படுவோம் என்று பவுல் கூறுகின்றார். இப்பகுதிகள் கிறிஸ்துவை விசுவாசிப்போர் மரணத்தைக் காணாமலும் இருக்கமுடியும் என்பதைக் காட்டுகின்றது.

சாது சுந்தர் சிங் நூல்களை படிக்கும்போது கைலாச மகரிசி என்ற ஒரு பரிசுத்தவானை அவர் அடையாளம் காட்டுகின்றார். இவரைப்போல் அனேக பரிசுத்தவான்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்ததினால் மரியாமலிருந்து அவருடைய வருகைக்காக பல வருடங்களாக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

யோவான் 21:22,23 ல் நான் வருமளவும் இவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன, நீ என்னை பின்பற்றி வா என்று கூறிய கூற்று தம்மை விசுவாசிப்பவர்களில் யார் யாரை குறித்து தேவ சித்தமுள்ளதோ அவர்கள் மரணத்தைக் காணாதிருப்பார்கள் என்று நம்ப இடமுண்டாகின்றது.

பிழைத்திருத்தலை வெறும் ஆவிக்குரிய முறையில் தியானித்து விட்டுவிட இயலாது. விசுவாசம் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் உள்ளடக்கியது. நிகழ்காலத்திலும் பிழைத்திருக்க செய்யும், வருங்காலத்திலும் பிழைத்திருக்க செய்யும்.

மரணத்தின் வழியாக பிழைத்திருத்தலும் உண்டு, ஜீவனின் வழியாக பிழைத்திருத்தலும் உண்டு. விசுவாசிக்கிறவன் எதன் வழியாக பிழைத்திருக்க வேண்டும் என்பதை நாமல்ல அவரே முடிவு செய்கிறார். எனவே இதனைக் குறித்து நாம் அபிப்பிராய பேதம் கொள்ளாது இயேசுவை விசுவாசித்து பெருவாழ்வு வாழ்வோம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.

பின்வாங்கிப்போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது. எபிரெயர் 10:38.

ADD YOUR COMMENT

Powered By Indic IME