உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.
In the world you will have tribulation. ( John 16:33)
John 15:19-21; Act 14:22; Romans 8:31-39; 2 Corinthians 7:4; 1Thes4 3:4; 2 Timothy 3:12; Hebrew 11:25; 1Peter 5:9; Revelation 7:14.
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார். (யோவான் 16:33)
யோவான் 15:19-21; அப்போஸ்தலர் 14:22; ரோமர் 8:31-39; 2கொரிந்தியர் 7:4; 1தெசலோனிக்கேயர் 3:4; 2தீமோத்தேயு 3:12; எபிரெயர் 11:25; 1பேதுரு 5:9; வெளி 7:14.
உலகத்தில் உபத்திரவம்:
உபத்திரவம் பாவத்தினால் உண்டாகும் என்பது பொதுவான சிந்தனையாகும். இக்கருத்தை நாம் சிந்தித்தால் பாவம் செய்ததினால் உபத்திரவம், ஒருவர் செய்த பாவத்தினால் இன்னொருவர் அடையும் உபத்திரவம், பாவமே செய்யாமலிருந்தும் உபத்திரவம் அடைதல் என மூன்றுவிதமாக பிரித்து பார்க்கலாம். இந்த உலகத்தில் உபத்திரவம் இருக்க காரணம் என்ன? முழு உலகமும் பொல்லாங்கனுக்குள் – தீமைக்குள் விழுந்து கிடப்பதுவே காரணமாகும். ஒருவன் பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் உபத்திரவம் உண்டு என்ற இயல்புநிலை மனிதர்களின் உள்ளங்களை பக்குவப்படுத்தி விட்டான. உண்மை என்னவெனில், பாவம் செய்யாத மனிதனை பாவம் செய்கிறவனும், நல்லவனை கெட்டவனும், சுதந்தரவாளியை அடிமையானவனும் உபத்திரவப்படுத்துவதே. இதனைதான் இயேசு கூறினார். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றார்.
தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறவர்களும், நீதிக்காக போராடுகிறவர்களும், நீதியை பேசுகிறவர்களும், நன்மை உண்டாக உழைக்கிறவர்களும் உபத்திரவபடுத்தபடவே பிசாசானவன் உலகத்தை தன் கீழ் வைத்துள்ளான். இங்கே நீதி விளையும்படியாகவோ, சத்தியம் முளைக்கும்படியாகவோ, ஒளி பிரகாசிக்கும்படியாகவோ அனுமதியில்லை. இயேசுகிறிஸ்து இதனை இருளின் ஆதிக்கம் என்று கூறினார். அந்தகாரத்தின் பெருக்கம் என்றார்.
இந்தியா தேசத்தின் வளர்ச்சிக்காய் பாடுபட்டவர்களையெல்லாம் அழித்து அக்கிரமத்தின் இரகசியம் கிரியை செய்து தற்சமயம் மேலோங்கி நிற்கின்றது. அதைபோலவே மனிதனின் ஆன்ம மீட்புக்காய் உழைக்கும் ஆன்மீகவாதிகளை வேரறுக்கும் காலம் கிரியை செய்து கொண்டிருக்கின்றது. உண்மையை – சத்தியத்தை – நீதியை – நன்மையை அழிக்க சாத்தான் தன்னுடையவர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவான். அது அவனுடைய காலமாயிருக்கிறது.
அதேவேளையில் துன்மார்க்கன் இல்லாமற்போகும் காலம் ஒன்று வரப்போகின்றது. நீதிமான் எழும்பும் காலம் தூரத்தில் தெரிகின்றது. நீதியின் சூரியன் கிழக்கில் தோன்றும் கால அடையாளம் தெரிகின்றது. தீமையும், அநீதியும், இச்சைகளும் வேரறுக்கப்படும் காலம் வருகின்றது. தேவன் ஒருவனை எழுப்ப போகிறார். நீதிமான்களின் கூக்குரல் கேட்கபடும் காலம் சமீபித்தது. துன்மார்க்கனை – சக்கந்தகாரனை தேடினேன். அவன் காணப்படாமற்போனான்.
துன்மார்க்கர் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்துவைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார். அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான். துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான். யோபு 21:13 – 20, 30