உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால்

உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால்.

You seek to kill Me, because My word has no place in you. (John 8:37)

Jn8:33,6,40,59,43,45-47; Jn5:16-18; Jn7:1,19,25,44; Jn10:31; Jn11:53; Jn12:39-43; Mt13:1519-22; Act13:26; Ro9:7; 1Co2:14

நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன், ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.  (யோவான் 8:37) 

யோவான் 8:33,6,40,59,43,45-47; யோவான் 5:16-18; யோவான் 7:1,19,25,44; யோவான் 10:31; யோவான் 11:53; யோவான் 12:39-43; மத்தேயு 13:1519-22; அப்போஸ்தலர் 13:26; ரோமர் 9:7; 1கொரிந்தியர் 2:14

உங்களுக்குள் என் உபதேசம்:
  இருதயமே மனிதனின் மையப்பகுதி. இந்த இருதயத்தில் கிறிஸ்துவின் உபதேசம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார் இயேசு. மனப்பாடம் செய்தல்ல, நமது இருதயத்தில் பதிந்து நமது சிந்தை தேவனுடைய சிந்தையாக மாற்றப்பட வேண்டும். இஸ்ராயேலர்களுக்குள் கிறிஸ்துவின் உபதேசம் இடம் பெறாததினால்தான் அவர்கள் இயேசுவை கொலைசெய்ய வகை தேடினார்கள். மோசேயின் பிரமாணம் அவர்களுக்குள் இருந்ததினால் அல்ல, மோசேயின் பிரமாணத்துக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் அவர்களுக்குள் வேர்கொண்டு இருந்ததினால் கிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

  இக்காலத்திலும் பாரம்பரிய உபதேசங்களும், தவறான விளக்கங்களும் நமது இருதயத்தில் இருப்பதினாலேதான் நம்மால் கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டிருக்கமுடியவில்லை. கிறிஸ்துவின் உபதேசமானது அவரை அனுப்பிய பிதாவினுடையதாயிருக்கிறது. யோவான் 7:16. பிதாவின் சித்தப்படி செய்பவனே அவரின் உபதேசத்தை ஏற்பான். யோவாான் 7:17. இந்த கிறிஸ்துவின் உபதேசத்தை அப்போஸ்தலர்கள் உலகமெங்கும், பறைசாற்றினர். இன்றைக்கு சபையானது இந்த உபதேசத்தை பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் உபதேசம் நமது இருதயத்தில் நிலைத்திருக்க நமது இருதயம் சுத்தமாக வேண்டும். ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் கேட்பது கிடைக்கும், விடுதலை பெறவியலும், ஆசீர்வதிக்கப்படவியலும்.

  கர்த்தாவே உம் உபதேசத்தை நாங்கள் அறிந்திருந்தாலும் உம் குமாரனின் உபதேசத்தையும் பெற்றுக்கொண்டிருக்க எங்களை அழைத்துள்ளமைக்கு உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME