என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் என் சீஷராயிருப்பீர்கள்.
Jesus said to those Jews who believed Him,If you abide in My word, you are My disciples indeed. (John 8:31)
Jn6:66-71; Jn15:4-9; Mt24:13; Act13:43; Act14:22; Ro2:7; Ro11:22; Col1:22; 1Tim2:15; 1Tim4:16; 2Tim3:14; Heb3:14; Heb8:9; Heb10:38,39; Jas1:25; 1Jn2:19,24.
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள், (யோவான் 8:31)
யோவான் 6:66-71; யோவான் 15:4-9; மத்தேயு 24:13; அப்போஸ்தலர் 13:43; அப்போஸ்தலர் 14:22; ரோமர் 2:7; ரோமர் 11:22; கொலோசெயர் 1:22; 1தீமோத்தேயு 2:15; 1தீமோத்தேயு 4:16; 2தீமோத்தேயு 3:14; எபிரெயர் 3:14; எபிரெயர் 8:9; எபிரெயர் 10:38,39; யாக்கோபு 1:25; 1யோவான் 2:19,24.
நிலைத்திருப்பவனே சீஷன்:
இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கேட்டு அதில் நிலைத்திருந்தவர்களே சீஷர்களாக நிலை நின்றார்கள் என்பதை யோவான் 6 ல் நாம் காண்கின்றோம். குருவை பின்பற்றுகின்றவர்கள் குருவின் உபதேசத்தை, குருவின் பழக்க வழக்கங்களை, குருவின் குணநலன்களை அப்படியே பின்பற்றினால்தான் குருஷேத்திரத்தில் நிலைத்திருந்து நல்ல சீடனாக மாறமுடியும். குருவுக்கு பிடிக்காத எதையும் செய்வது வெளியேற்றபடுவதற்கு வழிவகுக்கும்.
இயேசுவின் சீஷர்களாக இருக்க விரும்புகிறவர்கள் பின்னிட்டு பார்க்க இயலாது, உலக இச்சைகளின்மேல் கவனம் செலுத்தலாகாது, இயேசுவின் அடிச்சுவடுகளை அப்படியே பின்பற்ற வேண்டும். அவர் நடந்தபடியே நடக்க வேண்டும். அவர்போல கிரியைகள் செய்ய வேண்டும். அவர்போல பாடுகளை அனுபவிக்க ஆயத்தமாக வேண்டும். சிலுவையில் அறையப்படும் அனுபவங்களுக்குள் கடந்துபோக வேண்டும். என்றால்தான் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் வளரும்.
இஸ்ராயேலர் மோசேயின் வாக்கை நம்பினார்கள். அதற்கு விளக்கங்கள் கொடுத்து விரிவாக்கம் செய்து அவைகள் மேல் வைராக்கியம் பாராட்டினர். இயேசுகிறிஸ்துவின் உபதேசங்கள் அவர்கள் அறிந்திருந்த முறைமைகளுக்கு சற்று மாறுதலாக இருந்ததினால் அவரையும், அவரது வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாது புறந்தள்ளினார்கள்.
மோசேயின் வார்த்தைகளையும், இயேசுவின் வார்த்தைகளையும் சரியாய் விளங்கிகொள்ளாததுவே இதற்கு காரணம்.
கிறிஸ்துவின் உபதேசங்கள் அடிப்படையில் ப.ஏ உபதேசங்களுக்கு சற்று மாறுதலாகவே காணப்படுகிறது. இயேசுவின் உபதேசங்கள் எல்லாவற்றையும் பழைய ஏற்பாட்டு உண்மைகளுடன் இணைத்து பார்க்க இயலாது. ப.ஏ உண்மைகள் யாவும் உலகியல் கானான் நோக்கி பயணிக்கும்போது இயேசுவின் உபதேசங்கள் யாவும் மீட்பை நோக்கியும், பரலோக கானான் நோக்கியுமே பயணிக்கின்றது.
இயேசுவின் உபதேசத்தில் நிலைத்திருக்க முதலாவது அவரில் நிலைத்திருக்க வேண்டும். அவரில் நிலைத்திருப்பவனே இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு , விசுவாசித்து அதன்படி நடப்பான்.
கர்த்தாவே உம் மகன்மூலம் புது சபைக்குரிய உபதேசங்களை தந்துள்ளீர். நாங்கள் திரும்பவும் பூலோக கானான் நோக்கி பயணிக்காமல் பரலோக கானன் பயணத்தை தொடர உதவி செய்யும்.