உன்னைச் சமாரியனென்றும், பிசாசு பிடித்தவனென்றும் சொல்லுகிறோம்.
Do we not say rightly that You are a Samaritan and have a demon? (John 8:48)
Jn8:52; Jn4:9; Jn7:20; Jn10:20; Mt10:25; Mt12:24,31; Ro15:3; Heb12:3; Heb13:13; 1Pet4:14; Ps22:6; Ps31:18; Ps89:51.
அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். (யோவான் 8:48)
யோவான் 8:52; யோவான் 4:9; யோவான் 7:20; யோவான் 10:20; மத்தேயு 10:25; மத்தேயு 12:24,31; ரோமர் 15:3; எபிரெயர் 12:3; எபிரெயர் 13:13; 1பேதுரு 4:14; சங்கீதம் 22:6; சங்கீதம் 31:18; சங்கீதம் 89:51.
குற்றசாட்டுகள்:
பாவமில்லாதவராக, குற்றமில்லாதவராக, மாசில்லாதவராக வந்த இயேசு பற்பல அற்புத கிரியைகளை நடப்பித்தும், தேவ இராஜ்ய செய்தியைப் பிரசங்கித்தும் பற்பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து குற்றமில்லாதவர் என்று நிரூபிப்பதற்காக எந்த காரியங்களையும் அவர் செய்யவில்லை.
ஏன் அவர் இவ்விதமாய் நடந்து கொண்டார்?
- யாரை மீட்கும்படியாக வந்தாரோ அவர்களே தன்னை குற்றப்படுத்தியதினால் சகித்துக்கொண்டார்.
- எதிர்வினை – பதில்வினை புரியும்படி தேவன் தமது குமாரனை அனுப்பாமல் அவரால் உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அனுப்பப்பட்டார்.
- வெற்றியை நோக்கி பயணிக்கின்றவர்கள் குற்றச்சாட்டுகளையும், பாடுகளையும் அனுபவித்துதானாக வேண்டும். தன்னைக் காயப்படுத்துகிறவர்களையும், தான் பட்டக் காயங்களையும் சுமந்துக்கொண்டு வெற்றியின் படிகட்டுகளில் ஏறிச்செல்லமுடியாது.
நம்மேல் சுமத்தப்படும் குற்றசாட்டுகள் ஒழுக்கநெறிசார்ந்ததாகவும், உபதேசம் சார்ந்ததாகவும் இருக்குமானால் ஒத்துக்கொண்டு சரிபடுத்திக்கொள்ள வேண்டும். இயேசுவின்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்படிப்பட்டவைகளல்ல என்பதை கவனிக்க.
இயேசு குற்றப்படுத்தப்பட்டார். ஆனால் முடிவில் அவர் நீதிமான் என்று சாட்சியம் பெற்றார்.
நாம் குற்றம் சாட்டப்படாதவர்களாய் ஊழியம் செய்யவும், கிறிஸ்தவ வாழ்க்கை வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம்.
வீணாய் குற்றம் சாட்டுகிறவர்கள் தாழ்த்தப்பட்டு போகும் காலம் வருவது வரையிலும் சாக்கு போக்குச் சொல்லாமலும் ஒருவரின் விஷயங்களிலும் தலையிடாதவர்களுமாயும் வாழுங்கள். - கர்த்தாவே நீர் உருவாக்கிய மனுக்குலமே உம் தலைமகனை குற்றவாளியாக்கி கழுமரத்தில் ஏற்றியது. நாங்களும் அவ்விதமான பாடுகளில் சோராது முன்னேற உதவிடும்.