உங்கள் இராஜாவை நான் சிலுவையில் அறையலாமா சிலுவையில் அறையும்.

உங்கள் இராஜாவை நான் சிலுவையில் அறையலாமா? சிலுவையில் அறையும்.

Away with Him,away with Him! Crucify Him!.Pilate,Shall I crucify your King? (John 19 :15)

Luke 23:18; Matthew 27:22; Mark 15:12,13; Act 21:36; Act 22:22; Deu 28:43; Psalm 62:9; Ezekiel 21:26,27; Genesis 49:10.

அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். (யோவான் 19:15)

லூக்கா 23:18; மத்தேயு 27:22; மாற்கு 15:12,13; அப்போஸ்தலர் 21:36; அப்போஸ்தலர் 22:22; உபாகமம் 28:43; சங்கீதம் 62:9; எசேக்கியேல் 21:26,27; ஆதியாகமம் 49:10.

இவரை அகற்றும்:

கர்த்தராகிய இயேசு மனுகுலத்தின் மீட்புக்காகவும், இஸ்ராயேலரின் மேசியாவாகவும் வந்தார். அப்படியிருந்தும் அவருடைய ஜனங்கள் அவரை இவ்வுலகினின்று அகற்றிப்போடும்படியாக தங்களாலான எல்லா முயற்சிகளையும் பயன்படுத்துகின்றார்கள். இயேசுவை அகற்றும்படியாக கூறிய இஸ்ராயேலர்களின் தொனியில் மூன்று உண்மைகள் காணப்படுகின்றன.

முதாவதாக, இயேசு எங்களுக்கு தேவையில்லை என்பதாகும். மேசியாகவோ, இரட்சகராகவோ, இராஜாவாகவோ இவர் எங்களுக்கு தேவையில்லை என்பதாகும். அன்று இஸ்ராயேலர் செய்ததுபோலவே இக்காலத்திலும் சபைகளையும், சபை சார்பு இயக்கங்களையும், கிறிஸ்தவத்தையும் இந்த பூமியில் இராதபடிக்கு அகற்றிப்போடும்படியாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற சாத்தானுக்கு துணையாக உலக மக்களும், அரசங்கமும் காணப்படுகின்றது. உலகமும் இஸ்ராயேலரும் அவரை அகற்றிப்போட முயற்சித்ததினால் தேவன் அவரை நீண்ட ஆயுளுள்ளவராக ஏற்படுத்தியிருக்கின்றார். மரணத்தை ஜெயித்து இன்றும் வாழ்கின்றவராக ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டாவதாக. இயேசுவை சிலுவையில் அறையவேண்டும் என்பதாகும். தங்களால் அவரை கொன்றுபோட இயலாததினால் உரோமர்களாகிய புறத்தியாரிடம் அவரை ஒப்புக்கொடுத்தனர். இயேசுவை அகற்றுவது மட்டுமல்ல அவருக்கு வலி, வேதனை, துன்பம் யாவும் உண்டாக்கி முற்றிலுமாய் அவரை அழித்துப்போட வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். இனி இயேசுகிறிஸ்து இஸ்ராயேலர் பக்கம் எட்டிப்பார்க்கக்கூடாது என்பதற்காக இந்த கழுமரத்திலேற்ற துடிக்கின்றார்கள். இக்காலத்திலும் இயேசுவின் ஊழியக்காரர்கள், மக்களை அழிப்பதிலேயே உலகம் மும்முரமாயுள்ளது. இதனால்தான் என்னவோ சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தேவன் ஆண்டவரும், மீட்பரும், இராஜாவாகவும் ஏற்படுத்தினார்.

மூன்றாவதாக, இராயனே எங்களுடைய இராஜா என்பதாகும். மேசியா இஸ்ராயேலரின் கோத்திரத்திலிருந்து தான் வருவார் என்றும், மேசியாவை தவிர வேறு எவரையும் இராஜாவாக ஏற்றுக்கொள்ளாத வைராக்கியம் உடையவர்களாக இருந்தும் புறஜாதியினனாகிய உரோமர்களின் அரசனை தங்களின் இராஜவாக ஏற்றுக்கொள்கின்றனர். இஸ்ராயேலரை அழித்தவனும், அழிக்கப்போகிறவனுமாகிய உரோமனையே தங்கள் இராஜாவாக பாவிக்கின்றனர். இக்காலத்திலும் பாவத்திலும் அக்கிரமத்திலும் வாழும் தலைவர்களை இராஜாவாக ஏற்றுக்கொள்ளும் காட்சியை நாம் காண்கின்றோம். இதனால்தான் இயேசுவை தேவன் நித்திய இராஜாவாக நியமித்துள்ளார்.

யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன். இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள். ஏசாயா 49:6,7

மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர்நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஏசாயா 52:14,15.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:3-5.

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். ஏசாயா 52:13.

அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். ஏசாயா 25:8,9.

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு. விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 52:1-3.

ADD YOUR COMMENT

Powered By Indic IME