புசியாமலும், பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள் ஜீவனில்லை

புசியாமலும், பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள் ஜீவனில்லை.

unless you eat the flesh of the Son of Man and drink His blood, you have no life in you. (John6:53) 
Mt5:18; Mt18:3; Mt26:26-28; Mk14:21-26; Ro3:25,26; 1Co1:23; 1Co10:16,17; 1Co11:24-32 ;1Jn5:12,13.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  (யோவான் 6:53) 

மத்தேயு 5:18; மத்தேயு 18:3; மத்தேயு 26:26-28; மாற்கு 14:21-26; ரோமர் 3:25,26; 1கொரிந்தியர் 1:23; 1கொரிந்தியர் 10:16,17; 1கொரிந்தியர் 11:24-32; 1 யோவான் 5:12,13.

உங்களுக்குள் ஜீவனில்லை:

கிறிஸ்துவின் சரீரம், இரத்தம் குறித்த இயேசுவின் வெளியரங்கமான உபதேசத்தில் அப்பம், திராட்சைரசமாக நாம் பருகியிருந்தாலும் கிறிஸ்துவின் சரீரம், இரத்தத்தை உட்கொள்ளுகிறவர்களாகவே அறியப்படுகிறோம்.
முறைமைகள் மாறுபடலாம், ஆனால் அதன் உண்மை உபதேசம் மாறுபடவில்லை.

திருவிருந்தானது கிறிஸ்துவின் ஜீவனை நம்மில் இருப்பதாக வாக்களிக்கிறது. ஒரு கிறிஸ்தவன் பணிகளினிமித்தமாகவோ, வேறு காரியங்களினிமித்தமாகவோ வெளியிடங்களில் தங்க நேரிட்டு அங்குள்ள சபைகளில் பங்குபெறும்போது கட்டாயமாகவும், நிச்சயமாகவும் தற்காலிக ஏற்பாடாக அத்திருச்சபையில் அன்று பரிமாறப்படுகிற திருவிருந்தில் பங்குகொண்டு கிறிஸ்துவின் ஜீவன் தன்னில் இருக்கிறது என்பதை வெளிபடுத்தவேண்டும்.

சடங்குகளை அடிப்படையாகக் கொண்டும், பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டும் திருவிருந்தை புறக்கணிப்பது ஜீவனற்ற நிலையை காட்டுகிறது.

வெறுப்புகளினிமித்தம், பகைமை, கசப்புகளினிமித்தம், பிரிவினைகளினிமித்தம் சபையை வெறுத்து, திருவிருந்தை அன்றாடம் எடுக்காமலிருப்பது மிகப்பெரிய பாவமே.. குற்றமே.
கிறிஸ்துவின் ஜீவன் இல்லாதிருப்பதின் வெளிப்படைதன்மையாகும்.

வாரமொருமுறை, அல்லது மாதமொருமுறை கொடுக்கப்படும் திருவிருந்தை அசட்டை செய்யாதீர்.
சபை ஐக்கியம் கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம்.

திருவிருந்தோடுள்ள ஐக்கியம் கிறிஸ்துவின் ஜீவனோடுள்ள ஐக்கியம். ஊழியகாரன் எந்த நிலையில் உள்ளவனாயிருந்தாலும் தாங்கள் தற்செயலாக பங்குபெறும் சபைகளில் கொடுக்கப்படும் திருவிருந்தை அனுசரித்துதானாக வேண்டும். என்னிலும் கிறிஸ்துவின் ஜீவன் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

திருவிருந்தானது

  • நீ விடுதலை பெற்றுள்ளாய் என்றும்.
  • நீ ஆசீர்வாதத்தின் பங்குதாரர் என்றும்.
  • நீ தூய்மைக்கு அழைக்கப்பட்டுள்ளாய் என்றும்.
  • நீ ஜீவனுள்ளவனாயிருக்கிறாய் என்றும்.
  • நீ கிறிஸ்துவின் இராஜ்ஜிய பங்காளி என்றும் அறிவிக்கிறது. 

எந்த சபையிலும் கொடுக்கப்படும் திருவிருந்தையும் அசட்டையாக எண்ணாதே.
நீ நியாயந்தீர்க்கப்படுவாய் எச்சரிக்கை. 

நியாயம் விசாரிப்பது அவர். 
சரியா தவறா என்று அவர் தீர்மானிக்கட்டும்.
அவரிடம் விட்டு விடுங்கள்.
பரிசுத்த ஆவியானவர் கவனித்து கொண்டிருக்கிறார். 

கர்த்தாவே நீர் எங்களுக்கு தந்துள்ள தம் மகனாகிய நித்திய விருந்தை நாங்கள் செம்மையாய் அனுசரித்து நித்திய ஜீவனுள்ளவர்களாய் நடந்துவர எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME