உங்களுக்குச் சமாதானம்-இயேசு.
Jesus came and stood in the midst,Peace be with you. (John 20:19)
John 20:21; John 14:27; John 16:33; Luke 24:36; Romans 15:33;Ephesians 6:23; Philippians 1:2; 2The 3:16; Hebrews 7:2; Revelation 1:4,5; Psalms 85:8-10; Isaiah 57:18,19.
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (யோவான் 20:19)
யோவான் 20:21; யோவான் 14:27; யோவான் 16:33; லூக்கா 24:36; ரோமர் 15:33; எபேசியர் 6:23; பிலிப்பியர் 1:2; 2தெசலோனிக்கேயர் 3:16; எபிரெயர் 7:2; வெளி 1:4,5; சங்கீதம் 85:8-10; ஏசாயா 57:18,19.
சமாதான கிறிஸ்து:
கலங்கி தவித்தவர்களாய், பயந்து நடுங்கினவர்களாய், நம்பிக்கையில் உடைந்து போனவர்களாய் அறைவீட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த சீஷர்களை நோக்கி உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்றுக்கூறுகின்றார். எப்படிபட்ட சமாதானத்தை இயேசு வாக்களித்தார் என்பதை யோவான் 14:27 ன் தியானத்தில் கண்டோம். இங்கே இயேசுகிறிஸ்து சமாதான கிறிஸ்துவாக வந்தார் என்பதை தியானிப்போம். இன்று சமாதானம் என்பதின் ஒன்றுக்கொன்று எதிரிடையானான இரு முகங்களை காண்போம்.
ஒன்று, இயேசு கிறிஸ்து சமாதானத்தை உண்டுபண்ணுகிறவராக வந்திருக்கின்றார். தமது மரணத்தின் மூலமாக இந்த சமாதானம் உண்டாகின்றது என்பதை ஏசாயா 53:5 ல் காண்கின்றோம். அதாவது, ஆக்கினையடைந்து , உடைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, மரணிக்கப்பட்டு சமாதானத்தை உண்டுபண்ணுகிறார். தேவகுமாரனாய் – தேவசாயலாய் வந்தவர் ஆக்கினையடைய வேண்டிய அவசிமில்லாதிருந்தும் பாவத்தினிமித்தம் தண்டனையையும், நரகாக்கினையையும் அடைந்துக்கொண்டிருக்கும் மனுகுலத்தை காக்க வேண்டியதினிமித்தம் ஆக்கினையடைந்து சமாதானத்தை உண்டுபண்ணினார். தந்தையே, இவர்கள் செய்யவேண்டியதை இவர்கள் சார்பாக நான் செய்து முடித்து விட்டேன். ஆகையினால் இவர்களை விடுவித்து, இவர்களை மன்னித்து, இவர்களை காப்பாற்றி, இவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்யும் என்று வேண்டிக்கொண்டார் இயேசு. இதினிமித்தம் இயேசுவின் மரணத்தை அடிப்படையாக்கொண்டு யாரெல்லாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு பிதாவிடம் வருகிறார்களோ அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்கிறார்.
இன்னொன்று, ஆக்கினை கொடுத்து சமாதானம் உண்டுபண்ணுகிறார். அதாவது சமாதான குலைவுக்கு காரணமான சாத்தனை ஜெயித்தும், சமாதானத்தை கெடுக்க சாத்தானால் பயன்படுத்தப்பட்ட பாவத்தை பரிகரித்தும் சமாதானத்தை உண்டுபண்ணுகிறார். சாத்தானின் தலையை நசுக்கவும், பாவத்தை நீக்கி தொலைத்துப்பொடவும் இயேசு வந்தார். பாவத்தை சிலுவையில் கொன்றவர் சாத்தானை நரகத்தில் தள்ளி சமாதான குலைவுக்கு முற்றுபுள்ளி வைக்கப்போகிறார்.
அன்று ஆக்கினையடைந்து சமாதானம் உண்டுபண்ணினவர், இனி மேல் ஆக்கினை கொடுத்து பரிபூரண சமாதானத்தை உண்டுப்பண்ணப்போகிறார்.
சமாதானத்தின் தேவன்தாமே சாத்தானை சீக்கிரமாய் தன் காலின் கீழே நசுக்கி சமாதான பிரபுவாய் எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்ந்திருக்கப்போகிறார். அப்பொழுது சமாதானம் வற்றாத நதியைபோல பாய்ந்து வந்து சகலமும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கச் செய்யும்.
சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார். இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். மீகா5:1-5.
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து, அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். சகரியா6:9-13