எட்டுநாளைக்குப்பின்பு இயேசு உங்களுக்குச் சமாதானம் என்றார்.
after eight days His disciples were again inside, Jesus,Peace to you!. (John 20:26)
John 20:19; Matthew 17:1; Luke 9:28; Judgement 6:23; Isaiah 26:12; Isaiah 27:5; Isaiah 54:10.
மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். (யோவான் 20:26)
யோவான் 20:9; மத்தேயு 17:1; லூக்கா 9:28; நியாயாதிபதிகள் 6:23; ஏசாயா 26:12; ஏசாயா 54:10.
சமாதானம் உண்டாவதாக.
இயேசுகிறிஸ்து சமாதான கிறிஸ்துவாக வந்தார் என்று 20:19 ல் நாம் தியானம் செய்துள்ளோம். இன்றைக்கு நாம் இவ்வுலகத்தில் சமாதானமாக வாழ்வது குறித்து தியானிப்போம்.
பாவம், சாத்தான் ஆகிய இவைகளின் கிரியைகளினிமித்தம் மாம்சமும், உலகமும் பாவத்தினாலும், சாத்தானாலும் கறைபட்டு போயிற்று. மாம்சத்தோடும், உலகத்தோடும் தேவனுக்கிருந்த உறவுகள் முறிவதற்கும் காரணமாயிற்று. இந்த பாவத்தையும், சாத்தானையும் முற்றிலுமாக பரிகரித்தால் மட்டுமே மாம்சத்திலும், உலகத்திலும் மனுகுலம் சமாதானமாக வாழமுடியும்.
இயேசுகிறிஸ்து இந்த மாம்சத்திலும், உலகத்திலும் சமாதானத்தைக் கொண்டுவந்து மனுகுலத்தை சமாதானமாக வாழவைத்தால்தான் பாவத்துக்கும், சாத்தானுக்கும் முடிவுண்டாக்க முடியும். என்றாலும், சமாதானத்தை உருவாக்கின் இயேசு அந்த சமாதானத்தை வார்த்தையின் மூலம் மனித வாழ்க்கையில் கொடுக்க முனைகின்றார். முதலாவதாக இந்த சமாதானத்தை வார்த்தை வழியாக பெற்றுக்கொண்டவர்கள் சீஷர்களே. அவர்களிடம் அவர் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக என்றுக் கூறுகின்றார்.
வார்த்தையினால் வாக்களிக்கப்பட்ட சமாதானம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி கலக்கம் பயம் யாவும் நீக்கி முழு உலகிற்கும் சுவிசேஷமாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. பிரசங்கிக்கப்படுகிற இந்த சமாதானம் அதை ஏற்றுக்கொள்கிறவர்களின் வாழ்வில் கடந்து சென்று பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி சமாதானமாக வாழவைக்கிறது.
அப்படியானால் சமாதானத்தை சுவிசேஷமாகவும், வாழ்த்தாகவும் அறிவிப்பதற்காகவே தேவனுடைய மனிதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொருளாகும்.
சமாதான வாழ்த்துதல் கொடுப்பதற்கு தூதர்களே பணிக்கப்பட்டிருக்கும்போது தேவனுடைய மனிதர்கள் சமாதான வாழ்த்துதலை கொடுக்காமலிருக்க முடியாது. நாம் கொடுக்கிற சமாதான வாழ்த்துதல் நம்மை பலவிதங்களில் செயல்பட வைக்கின்றது. நம்மை சுறுசுறுப்புள்ளவராக மாற்றுகின்றது. பிறரின் உள்ளகிடக்கையை அறிய வைக்கின்றது. பாடுகளிலும் உபத்திரவங்களிலும் நம்மை மகிழ்ச்சியாயிருக்க வைக்கின்றது. பிறருக்குள் உண்டாகும் சமாதான எழுச்சியினிமித்தம் தேவனோடு பயணிக்க வைக்கின்றது. தன்னை இழப்பதற்கும் தயாராக்குகின்றது.
சமாதான வாழ்த்துதல் கொடுப்பதற்காகவே கிறிஸ்தவர் சிருஷடிக்கப்பட்டுள்ளார். ஆசீர்வாதங்களையல்ல சமாதானத்தையே இயேசு வைத்து போயுள்ளார். ஆசீர்வாதம் நிபந்தனைகள் சார்ந்தது. சமாதானமோ கிருபை சார்ந்தது. சமாதானமாய் வாழ சமாதானத்தை பகிர்வோம்.
பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள். எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். ஏசாயா52:4-11.
நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. எபிரெயர் 13:20,21.