நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறதினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்கள்.
If you know these things, blessed are you if you do them. (John 13:17)
John15:14; Matthew 7:24,25; Matthew 12:50; Luke 12:47,48; Galatians 5:6; Hebrews 11:7,8; James 1:25; James 2:20-24; James 4:17; Revelation 22:14; Psalms 19:11; Psalms 119:1-5.
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். (யோவான் 13:17)
யோவான் 15:14; மத்தேயு 7:24,25; மத்தேயு 12:50; லூக்கா 12:47,48; கலாத்தியர் 5:6; எபிரெயர் 11:7,8; யாக்கோபு 1:25; யாக்கோபு 2:20-24; யாக்கோபு 4:17; வெளி22:14; சங்கீதம் 19:11; சங்கீதம் 119:1-5.
அறிந்ததின்படி செய்யுங்கள்:
விவிலியம் தேவனுடைய மனிதர்களுக்கு தேவனுடைய மனிதர்களின் வாழ்வில் செய்யவேண்டிய தேவ விருப்பத்தை தேவனுடைய ஆவியினால் வெளிபடுத்திக்காட்டுவதாகும். இவைகளின் கருபொருள்கள் தேவ ஆவியினால் முத்திரிக்கப்பட்டுள்ளது. மனித வரலாற்றுக்குள் தேவனுடைய நோக்கத்தை அந்தந்த காலத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும், திருஷ்டாந்தமாகவும், கருபொருளாகவும் எடுத்தியம்புவது பரிசுத்த ஆவியானவரே. எனவே தேவனுடைய ஆவியினாலேயன்றி தேவனுடைய நோக்கங்களை ஒருபோதும் அறிய முடியாது. தேவனுடைய ஆவியை பெற்று விவிலியத்தின் மாண்பையும், தேவ நோக்கத்தையும் அறியாதிருப்பதும், அறிந்து அதன்படி செய்யாமலும் வாழாமலும் இருப்பது மிகப்பெரிய பாவமாகும். அநேக அடிகளுக்கு பாத்திரவான்களாவோம்.
இவ்வசனத்தை கர்த்தராகிய இயேசு தமது சீஷர்களுக்கு போதித்தார். அவர் தேவனுடைய ஆவியினாலே போதித்ததினால் தேவ இராஜ்ஜியத்தின் காரியங்களை அறிந்துக்கொண்டார்கள். அறிந்துக்கொண்ட சீஷர்கள் அதன்படி செய்யவேண்டும் என்பதற்காகவே தமது ஆவியையும் தமது பயிற்சியையும் கொடுத்தார். அதன்படியாக அவர்கள் நடந்துக் கொள்வார்களானால் பாக்கியவான்களாவார்கள்.
நாம் பாக்கியவானகளாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
நாம் நமது பாவங்களிலிருந்து இயேசுவின் இரத்தத்தினால் விடுதலை பெற்று கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குள் அமைந்து தேவ ஆவியினாலும், கர்த்தருடைய வாக்கினாலும் அனுதினமும் சுத்திகரிக்கப்பட்டு தேவனுடைய ஆவியை கொண்டு தேவனுடைய வாக்கியங்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும்.
அறிந்துக்கொண்டதின்படி நாம் நம்மை அதற்கென்று தகுதியாக்கிக்கொள்ள வேண்டும். நம்மை பயிற்றுவிக்க வேண்டும். நமது இருதயத்தை அதற்கென்று பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி நடந்து, வாழ்ந்து, செய்து ஜெயிக்க வேண்டும். கர்த்தருடைய நோக்கத்தை கொண்டுதான் சாத்தானையும், பாவத்தையும், உலகத்தையும், மாம்சத்தையும், சாபத்தையும், மரணத்தையும் ஜெயிக்க முடியும்.
இயேசுவும் இவ்விதமே நடந்தார். நாமும் அவ்விதமே நடப்போம். வெற்றி நமதாகும்.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1யோவான் 2:3 – 6
நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். 1யோவான் 6:20.
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 1யோவான் 6:27.