இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்

இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்…

அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
(யோவான் 1:34)

யோவான் 1:18,49; யோவான் 3:16-18,35,36; யோவான் 5:23-27; யோவான் 6:69; யோவான் 10:30,36; யோவான் 11:27;யோவான் 19:7; யோவான் 20:31; ரோமர் 1:4,5.

சமீப காலங்களில் ……
– தேவனுக்கு குமாரன் இருப்பது எப்படி?..

– குமாரனை தேவன் ஜெநிப்பித்தார் என்றால் தேவனை ஜெநிப்பித்தவர் யார் என்று இருவிதமான கேள்விகளை கேட்கின்றனர்

கேள்வி கேட்பவர்களுக்கு தேவ குமாரன் அவர்களுக்குள் வந்து புத்தியை கொடுக்காவிட்டால் அவர்கள் பதிலை பெறவியலாது

இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பலர் சாட்சி கொடுத்தனர்

1. தேவன் சாட்சி கொடுத்தார்.. மத்தேயு 3:17; 1யோவான் 5:9

2. யோவான் ஸ்நானன் இவரே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தார்.. யோவான் 1:34

3. பிசாசுகள் இயேசுவே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தனர்.. மத்தேயு 8:29; மாற்கு 3:11; மாற்கு 5:7; லூக்கா 4:4
4. அப்போஸ்தலர்கள் இயேசுவே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தனர்.. மத்தேயு 16:16; 1 யோவான் 2:23; 1 யோவான் 3:8….

5. தேவதூதன் இயேசுவே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தான்.. லூக்கா 1:35

6. நூற்றுக்கு அதிபதி இயேசுவே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தான்.. மத்தேயு 27:54

7. நாத்தான்வேல் இயேசுவே தேவ குமாரன் என்று சாட்சி கொடுத்தான்… யோவான் 1:49

8. விசுவாசம் என்பது இயேசுவை தேவனுடைய குமாரன் என்பதுவே.. அப்போஸ்தலர் 8:37

9. சுவிசேஷங்களும் , சபைகளும் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று சாட்சியிடுவதற்காகவே ஏற்படுத்தபட்டுள்ளது.. யோவான் 20:31….

10. இயேசு தேவனுடைய குமாரனாக வெளிப்பட காரணமே பிசாசின் கிரியைகளை அழிக்க.. 1யோவான் 3:8

11. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுகிறவனில்தான் தேவன் நிலைத்திருக்கிறார்.. 1யோவான் 4:1

12. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பவனே உலகை ஜெயிப்பான்.. 1யோவான் 5:5

13.இயேசுவை தேவனுடைய குமாரனாக கொண்டிருக்கிறவனே ஜீவன் உடையவன். 1யோவான் 5:12

14. தேவனை அறிவதற்கு தேவ குமாரன் மட்டுமே நமக்கு புத்தியை தர முடியும். 1யோவான் 5:20
தேவகுமாரன் நம்மில் சத்தியத்தை விளங்க செய்தால் தான் ஆவியின் மூலம் தேவ இரகசியங்களை அறிய முடியும்

இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தது போல நாமும் அவரின் புத்திரர்களாக புத்திரிகளாக இருப்போமா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME