எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்.
everyone will believe in Him,Romans will come and take away both our place and nation. (John 11:48)
Jn 1:7; Lk8:12; Lk11:52; 1Thes2:15,16; Mat21:40-42; Mat22:7; Mat23:35-38; Lk 19:41-44; Deu28:50-68; Dan9:26,27; Zec13:7,8; Zec14:1,2.
நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள், அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். (யோவான் 11:48)
யோவான் 1:7; லூக்கா 8:12; லூக்கா 11:52; 1தெசலோனிக்கேயர் 2:15,16; மத்தேயு 21:40-42; மத்தேயு 22:7; மத்தேயு 23:35-38; லூக்கா 19:41-44; உபாகமம் 28:50-68; தானியேல் 9:26,27; சகரியா 13:7,8; சகரியா 14:1,2.
பய உளறல்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ராயேல் ஜனம் தேவனுடைய குமாரனைப் பின்பற்றி வாழ்வதற்கு விருப்பமற்று செயல்பட காரணம் பயமேயாகும். இவர்களுக்குள் பயம் உண்டாக காரணம் இரண்டு விஜயங்கள் ஆகும்.
ஒன்று- ஜனங்கள் எல்லாரும் இயேசுவை விசுவாசிப்பார்கள் என்பதாகும். இயேசுவினால் செய்யப்படும் நற்கிரியைகள் இஸ்ராயேலருக்குள் வரப்போகிற மேசியா இவர்தானோ என்ற ஆர்வத்தை எழுப்பியது. இதனால் இஸ்ராயேலர்கள் அவரைப் பின்பற்ற ஆர்வமானார்கள். பலர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். இயேசுவை விசுவாசிப்பதினால் இவர்களுக்கு – சமய தலைவர்களுக்கு ஏன் பயம் உண்டாயிற்று? அவர்களோடு இவர்களும் இயேசுவைப் பின்பற்ற வேண்டியதுதானே . பின்பற்றுவதற்குறிய மனம் இல்லை என்றாலும் தங்களுடைய அந்தஸ்தையும், கவுரவத்தையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. மேலும் இயேசுவை மேசியா என்று ஏற்காதபடிக்கு பிசாசினால் இவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டிருந்தன. இக்காலத்திலும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் பெருகிக்கொண்டே போவதினால் தங்ளுடைய பிழைப்பு கெட்டுவிடும், அந்தஸ்து பறிபோகும் என்று நினைக்கின்றனர். மேலும் இயேசுவைக்குறித்த தெளிவான பார்வை அவர்களுக்கு உண்டாகாதபடிக்கு பிசாசு அவர்களுடைய கண்களைக் குருடாக்கியுள்ளான்.
இரண்டாவதாக – எல்லாரும் இயேசுவை பின்பற்றி போனால், ரோமர்கள் வந்து நம்மை விலக்கிவிட்டு வேறே ஆட்களை நியமிப்பார்கள் என்று கருதினர். இவ்வாறு நினைப்பதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன. இயேசுவை ரோமர்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கும் கலக கூட்ட தலைவன் என்று நினைத்தனர். இயேசுவின் எழுச்சியை நாம் தடுக்காவிட்டால் ரோமர்கள் தங்கள் படைபலத்தோடு வந்து இயேசுவின் கூட்டத்தை அடக்கி நம்மை நம் ஸ்தானத்திலிருந்து வெளியேற்றிவிடுவார்கள் என்று கருதினார்கள். இவர்களைப்போலவே இக்காலத்திலும் கிறிஸ்தவர்கள் பெருகிவிட்டால் அமெரிக்கர்கள் வந்து நம் மேல் அதிகாரம் செலுத்தி இந்தியாவை கிறிஸ்து நாடாகவும், கிறிஸ்தவர்களே ஆளுகிறதாகவும் மாற்றி நம்மை வெளியேற்றிவிடுவாகள் என்று நம்பியே பலவந்தமான உபத்திரவத்தைக் கொடுக்கின்றனர்.
யார் எதிர்த்தாலும் , அழிக்க நினைத்தாலும் எல்லாரும் இயேசுவை பின்பற்றி சமாதான உலகமாய் இவ்வுலகம் மாறத்தான் போகுது. மட்டுமல்ல, விரும்புகிறோமோ இல்லையோ இயேசு சீக்கிரமாய் வந்து ஆயிரம் வருடம் இப்பூமியை ஆளுகை செய்யத்தான் போகிறார்.
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 2தெசலோனிக்கேயர் 1:7,8