ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
I must work the works of him that sent me,while it is day: the night cometh,when no man can work. (John 9:4)
Jn4:34; Jn5:19,36; Jn10:32,37; Jn17:4; Lk13:32-34; Act4:20; Jn11:9,10; Ps90:12.
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. (யோவான் 9:4)
யோவான் 4:34; யோவான் 5:19,36; யோவான் 10:32,37; யோவான் 17:4; லூக்கா 13:32-34; அப்போஸ்தலர் 4:20; யோவான் 11:9,10; சங்கீதம் 90:12.
பகற்காலம் – இராக்காலம்:
இயேசுகிறிஸ்து பூமியில் அனுப்பப்பட்டகாலம் பகற்காலமாகும். ஏனெனில் ஒளியாய் வந்த இயேசுவினால் இருள் விலகியது. பாவங்களுக்கு முடிவு உண்டானது. சாத்தானுக்கு தடை ஏற்படுத்தபட்டது. இயேசு பூமியில் ஏற்றிவைத்த சுவிசேஷத்தின் ஒளி உலகமெங்கும் கடந்து சென்று பாவ இருளை, அஞ்ஞான இருளை விலக்கியது.
இயேசுகிறிஸ்து பூமியை விட்டு செல்லுகையில் சுவிசேஷத்தின் ஒளி இருந்தாலும் பாவ இருளும், அஞ்ஞான இருளும் மறுபடியும் ஆதிக்கம் செலுத்தக்கூடும். விசுவாசம் இருதயங்களுக்குள் கடந்து செல்லுவது வரையிலும் அவைகள் ஆதிக்கம் செலுத்த முனையும். இதனை இராக்காலம் என்கிறோம்.
அக்கிரமத்தின் இரகசியம் பெருகும்போது, சண்டாளர் பூமியில் ஆட்சிகட்டிலில் அமரும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித் திரியும்போது ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலமாய் இருக்கிறது என்றே பொருளாகின்றது. திருடனாகிய சாத்தான் நன்மையை திருடவும், நல்லவர்களை கொல்லவும், சத்தியத்தை அழிக்கவும் முனைவதே இராக்காலமாயிருக்கிறது.
ஒருவரும் கிரியை செய்ய இயலாத இராக்காலம் இருந்தாலும் சுவிசேஷத்தின் ஒளியாகிய இரட்சிப்பை கொண்டுசெல்லும் விசுவாச மனிதர்களினாலேதான் இராக்காலங்களை பகற்காலங்களாக்கவியலும். விசுவாசத்தின் பாதையில் முன்னேறும் விசுவாச வீரர்களுக்கு பட்டயமாகிய வசனத்தையும், ஆவியையும் தேவன் தந்துள்ளார். இதனால் இராக்காலத்தை பகற்காலமாக்க முடியும். இருளை வெளிச்சமாக்க முடியும். தீமையிலும் நன்மை செய்ய முடியும்.
உன்வாழ்வில் இராக்காலத்தில் ஒளிரும் நம்பிக்கையாகிய இயேசு இருப்பது வரையிலும் இராக்காலம் உன்னை மேற்கொள்ளாது.
கர்த்தாவே, உம்மை கொண்டிருந்து பகலின் பிள்ளைகளாய் வாழ எங்களுக்கு உதவி செய்யும்.