இரட்சிப்பு
தியான பகுதி – யோவான் 5:29 – 34.
(1தீமோ1:15). நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். (யோவான் 5:34)
ஜீவன் பெறுதல், விடுதலையடைதல், தப்புவிக்கப்படுதல், சுகமடைதல்.
இயேசுவே இரட்சகர் – உலக மீட்பர்.அவர் நம்மை இரட்சிக்க வந்தார். அதன் பொருளென்ன?
1. நமக்கு ஜீவன் தரும்படி வந்தார். யோவான் 10:10.
அவருடைய ஜீவனை.
நித்திய ஜீவனை தரும்படி வந்தார்.
மரண வாசலுக்குள் இருப்போருக்கு,
மரண வாசனைக்குள் இருப்போருக்கு,
மரண கட்டுகளுக்குள் இருப்போருக்கு ஜீவன் தர வந்தார்.
நாம் உயிரடையும்படி வந்தார்.
மரணமடைந்து மரணத்தின் கூரை ஒடித்தார்.
மரித்தோருக்கு ஜீவன் தந்து உயிர்பெற வைத்தார்.
– அவரிடம் வந்தால் ஜீவன் உண்டு. யோவான் 5:40,
– அவரை விசுவாசித்தால் ஜீவன் உண்டு. யோவான் 6:47
– நற்கருணையில் பங்கு பெற்றால் ஜீவன் உண்டு. யோவான் 6:54.
– அவரை அறிபவருக்கு ஜீவன் உண்டு. யோவான் 17:3.
– குமாரனை உடையவன் ஜீவன் உடையவன். 1 யோவான் 5:12.
– பவுல் கிறிஸ்து எனக்கு ஜீவன் என்றார். பிலிப்பியர் 1:21.
ஆம் இயேசு ஜீவன் தர வந்தார்.
2. நாம் சுகம் அடையும்படி வந்தார். மத்தேயு 8:16,17.
வியாதியிலிருந்து சுகம் அடையும்படி வந்தார்.
வியாதிகள்:
– பாவத்தினால் உண்டான வியாதிகள் உண்டு. அவைகளை அறிக்கை செய்ய வேண்டும். நீதிமொழிகள் 28:13. யாக்கோபு 5:16.
இனி பாவம் செய்யாமலிருக்க வேண்டும். யோவான் 5:14.
– சாத்தானால் உண்டான வியாதிகள் உண்டு.
சாத்தான் துரத்தபடும்போது இவ்வியாதிகள் நீங்குகின்றது. மத்தேயு 9:32.
தீராத வியாதிகளின் பின்னணியத்தில் சாத்தான் இருக்கக்கூடும்.
இயேசு அவ்விதம் செய்தார். அப்போஸ்தலர் 10:38.
இயேசு குணமாக்குகிறார். லூக்கா 6:19.
கிறிஸ்து குணமாக்குகிறார். அப்போஸ்தலர் 9:34.
அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 1 பேதுரு 2:24.
அவருடைய வார்த்தைகளால் சுகம் உண்டாகியுள்ளது. மத்தேயு 8:8. சங்கீதம் 107:20.
இப்பொழுது இயேசு நம்மை குணமாக்க நமக்கு விசுவாச ஜெபம் தேவை. யாக்கோபு 5:15.
எனவே நாம் விசுவாசத்தில் பெருக வேண்டும்.
3. நாம் தப்புவிக்கப்படும்படி வந்தார்.
விடுவிக்கப்படும்படி வந்தார்.
– தண்டனையிலிருந்து தப்புவிக்க.
பாவத்தினால் உண்டான தண்டனை. சிறையிருப்பு, வறுமை, தரித்திரம் போன்றவை.
– தேவகோபாக்கினையிலிருந்து தப்புவிக்க.
இனி வரப்போகும் கோபாக்கினையின். 1 தெசலோனிக்கேயர் 1:10.
– நரக ஆக்கினையிலிருந்து தப்புவதற்காக. மத்தேயு 23:33,
நரகில் தள்ளுகிறவரும் அவரே,
நரகிற்கு தப்புவிப்பவரும் அவரே.
– பாவத்தின் பிடியிலிருந்து, அடிமைதனத்திலிருந்து. ரோமர் 6:6
– பொல்லாத உலகினின்று. கலாத்தியர் 1:4
– பொல்லாத மனுஷர்களிலிருந்து 2தெசலோனிக்கேயர் 3:2.
– சாத்தானின் பிடியிலிருந்து லூக்கா 8:2, 35.
அவர் இரட்சிக்கிறார். எவரையும், எப்பொழுதும், எங்கேயும் அவரால் இரட்சிக்க முடியும்.
கர்த்தாவே உமது இரட்சிப்புக்காய் காத்திருந்தோம். நீர் உமது மகன் இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் வழியாகவும், உயிர்த்தெழுதல் வழியாகவும் எங்களுக்கு ஜீவன் தந்து எங்களை இரட்சித்தீர். உமக்கு நனறி.