இயேசுவுக்கு பின்சென்றார்கள்

இயேசுவுக்கு பின்சென்றார்கள்..

அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். (யோவான் 1:37)

யோவான் 37-39; யோவான் 6:2; யோவான் 8:12; யோவான் 12:26; யோவான் 13:36-38; மத்தேயு 8:1,10,22; மத்தேயு 9:9; மத்தேயு 10:38; மத்தேயு 15:23; மத்தேயு 16:24; மத்தேயு 19:21-28; எபேசியர் 5:1; எபிரெயர் 4:1; எபிரெயர் 10:38,39

பின்பற்ற தகுந்தவர்கள்……..

பழைய ஏற்பாட்டில் எந்த ஒரு பரிசுத்தவானும் பின்பற்ற தகுந்தவர்கள் அல்ல, அப்படி அவர்களை பின்பற்றும்படி சபைக்கு கட்டளையிடவும் இல்லை……

அதற்கு பல காரணங்கள் உண்டு……

ஆனால்……

புதிய ஏற்பாட்டில் பின்பற்றுவதற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளவர்கள் உண்டு…….
1. இயேசு கிறிஸ்து… மத்தேயு 4:19-22..
2. அப்போஸ்தலர்கள்………
3. பவுல்.. 1 கொரிந்தியர் 4:16; 1 கொரிந்தியர் 11:1; பிலிப்பியர் 3:17….
4. பரிசுத்தவாங்கள்………
5. சபை.. 1தெசலோனிக்கேயர் 2:14…..

அன்று…….

உலகத்தார் சபைகளை கவனித்து சபைகளின் மாதிரியை பின்பற்றி உலகம் உய்வடைந்தது…

இன்று…..
உயர்வடைந்த உலகை சபைகள் பின்பற்றி உலகியியல் காரியங்களை சபைக்குள் கொண்டுவந்து சபைகள் உலகியியல் சித்தாந்தங்களின் பிறப்பிடமாக மாறிக்கொண்டு வருகிறது…….

இன்று எந்த சபையை பின்பற்றுவது?…..
எந்த சபை தலைவரை பின்பற்றுவது?……
பவுலைப்போல ‘என்னை பின்பற்றுங்கள்’ என்று கூறப்போவது யார்?………

பிதாவை கிறிஸ்து பின்பற்றினார்……..

கிறிஸ்துவை ஆதி ஊழியர்கள் – பவுல் பின்பற்றினர்………

பவுலை பின் சந்ததியினர் பின்பற்ற அறிவுறுத்தினார்…. “நான் கிறிஸ்துவை பின்பற்றுவது போல நீங்கள் என்னை பின்பற்றுங்கள்… நான் என்னில் கிறிஸ்துவை காண்பிக்கின்றேன்” என்று பவுலை போல கூறுபவர் யார்?……

அவரை பின்பற்றினால் என்ன கிடைக்கும்?

நித்திய ஜீவன் – அழியாமை கிடைக்கும்..

பரலோகம் போக தகுதியானவர்களுக்கு மட்டுமே இந்த அழியாமை கிடைக்கும்……

நீங்கள் உங்கள் முன் நடக்கிறவர்களை முந்த வேண்டாம்…..
முந்தி செல்ல அங்கு இடமில்லை…..
அவர்கள் இடறி விழுந்தால் நீங்கள் முந்தும்படி நடத்த படுவீர்கள்………
மற்றபடி நீங்கள் அவர்களை பின்தொடருங்கள்……

அதுவே கட்டளை…..

ADD YOUR COMMENT

Powered By Indic IME