இயேசு பிலிப்பை கண்டு, நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். (யோவான் 1:43)
மத்தேயு 4:18-21; மத்தேயு 9:9; லூக்கா 19:10; பிலிப்பியர் 3:12; 1 யோவான் 4:19; ஏசாயா 65:1.
Follow என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 133 தடவைகள் வருகின்றன.
இதன் கிரேக்க சொல் அக்கோலூத்தியோ (akoloutheo) என்பதற்கு இரு பொருள் உண்டு.
முன்னிட்டு செல்வோரை பின்தொடர்ந்து –
1.அவரோடு உன்னை ஒரு உதவியாளனாக-இணையாளனாக இணைத்துக்கொள்.
2. அல்லது உன்னை ஒரு சீஷனாக இணைத்துக்கொள் என்பதாகும்.
இயேசு பிலிப்பிடம்…
– என்னை பின்தொடர்ந்து வா.
– என்னை நம்பி பின்பற்றி வா.
– என்னிலே தங்க பின்பற்றி வா.
– என்னிடம் கற்க பின்பற்றி வா.
– என் கட்டளையை எடுத்து செல்ல பின்பற்றி வா.
அதன்படி பிலிப்பு இயேசுவை பின்பற்றினான்.
பின்பற்றுவோர் சீஷத்துவத்துக்கு நடத்தபடுகிறார்கள்.
சீஷத்துவம் கிறிஸ்துவை – சிலுவையை சுமக்க நடத்துகிறது.
சுமத்தல் அதிலே தன்னை மரணிக்க நடத்துகிறது.
அதிலே மரணித்தல் கிறிஸ்து அவனாக – அவளாக பிரதிபலிக்க நடத்துகிறது.
பின்பற்றுவோர்…
அவரது சாயலை காண்பிக்கின்றனர்.
அவர் வார்த்தையை தெரிவிக்கின்றனர்.
அவர் தன்மையை பிரதிபலிக்கின்றனர்.
அவர் மாதிரியை வைத்து போகின்றனர்.
அழைப்பு கொடுக்கப்படுகிறது…..
ஆனால் லூக்கா 9:57-62 ஐ பாருங்கள்.
நாம் மனிதனை அல்ல இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்.