இயேசு தமது சீஷர்களை பார்த்து, வந்து பாருங்கள் என்றார்.

இயேசு தமது சீஷர்களை பார்த்து, வந்து பாருங்கள் என்றார்.

அவர்: வந்து பாருங்கள் என்றார், அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. (யோவான் 1:39)

யோவான் 1:46; யோவான் 4:29; யோவான் 6:37; யோவான் 11:34; மத்தேயு 11:28-30; மத்தேயு 28:6; வெளி 6:1,3,5,7; நீதிமொழிகள் 8:17.

இயேசு கிறிஸ்து, பரலோகம் விட்டு பூலோகம் வந்தவர்தான். யோவான் 3:17
முந்தி நம்மிடம் அன்பு கூர்ந்தவர்தான்.
1 யோவான் 4:19
ஆனாலும் அவர் நம்மை அழைக்கின்றார்.

இரண்டு விதமான அழைப்பு உண்டு
1. பொதுவான அழைப்பு.
உலகில் துவங்கி உலகிற்காக,உலகிலே முடிவது.

2. விசேஷித்த அழைப்பு.
பரத்திலிருந்து பரத்திற்காக பரத்திலே முடிவது.

இந்த இரண்டாம் அழைப்பானது
– பாவத்திலிருந்து மீட்கபடும்படியான அழைப்பு. மத்தேயு 11:28

– தன் பிள்ளைகளாயிருக்கும் படியாகவும், தன் ஜனமாயிருக்கும் படியாகவும் அழைப்பு. 1யோவான் 3:1

– சுவிசேஷம், செய்தி சுமந்து செல்ல அழைப்பு. ரோமர் 1:1; ரோமர் 4:4; மத்தேயு 4:19; 1 பேதுரு 2:9

– சிலுவை சுமக்க அழைப்பு. மத்தேயு 16:24; 1தீமோத்தேயு 6:12; 1 பேதுரு 2:21

எதற்காக அழைக்கின்றார்?

– இராஜாக்களாயிருக்க அழைப்பு. பழைய ஏற்பாடு

– ஆசாரியர், தீர்க்கர், சுவிசேஷகர், மேய்ப்பர், அப்போஸ்தலர், போதகர், மூப்பர், கண்காணி, உதவிகாரர்,டீக்கன்ஸ் களாக இருக்க அழைப்பு.

– கிறிஸ்துவின் சரீரத்தோடு இணைந்திருக்கும்படியான அழைப்பு. 1கொரிந்தியர் 1:9

– பரிசுத்தராய் – பரிசுத்தமாய் இருக்க அழைப்பு. 1கொரிந்தியர் 1:2; 1தெசலோனிக்கேயர் 4:7

– சமாதானமாயிருக்க அழைப்பு. 1கொரிந்தியர் 7:15; கொலோசெயர் 3:15

– ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைப்பு. 1பேதுரு 3:9

எப்படி அழைக்கின்றார்?
1. அசரீரி – குரல் மூலம் அழைக்கின்றார் ஆதியாகமம் 12:1
2. தரிசனம், சொப்பனம் மூலம் அழைக்கின்றார். ஆதியாகமம் 12:7
3. தீர்ர்கர்கள்,ஆசாரியர்கள், ஊழியர்கள், இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவி மூலம் அழைக்கின்றார்.
4. விவிலியத்தை வாசிப்பதின் மூலமாகவோ, வாசிக்க கேட்பதின் மூலமாகவோ அழைக்கபடுகின்றனர். அப்போஸ்தலர் 8:28
5. இருதயம் தூண்டபட்டு, ஏவபட்டு அழைப்பை பெறுகின்றனர். கலாத்தியர் 1:15

அழைப்பை பெறுவதினால் ஒருவர் தேவ பணியினை செய்துவிட முடியாது.
அதன்பின்புள்ள 6 படிகளை தாண்டி வருபவரே ஊழியத்தில் நிலைத்திருந்து முடிவில் பரலோகில் நிறைவடைகின்றார்.

அழைக்கப்பட்ட அழைப்பிலே நிலைத்திருங்கள்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME