இயேசு காடியை வாங்கினபின்பு தலையைச்சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
Jesus had received the sour wine,and bowing His head,He gave up His spirit. (John 19:30)
John 10:11,18; Matthew 20:28; Matthew 27:50; Mark 15:37; Luke 23:46; Philipians 2:8; Hebrew 2:14,15; Hebrew 4:10; Hebrew 5:7-10.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:30)
யோவான் 10:11,18; மத்தேயு 20:28; மத்தேயு 27:50; மாற்கு 15:37; லூக்கா 23:46; பிலிப்பியர் 2:8; எபிரெயர் 2:14,15; எபிரெயர் 4:10; எபிரெயர் 5:7-10.
இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்தார்:
ஆவியை என்று இயேசு கூறியிருப்பதை ஜீவனை – உயிரை என்று நாம் பொருள் கொள்கின்றோம். ஆவி ஆத்துமா சரீரம் என்ற நிலைபாட்டுக்குள் செல்லாது இயேசு மரண நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவராய் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார் என்று தியானிக்கின்றோம்.
தேவனால் பிறந்தவர், ஆவியினால் பிறந்தவர் தமது ஜீவனை தேவனிடமே ஒப்புக்கொடுக்கின்றார். காற்றோடு கலந்துவிடும்படியாக தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கவில்லை. தமது தந்தையிடமே தமது ஜீவனை ஒப்புக்கொடுக்கின்றார். இவ்விதமான அனுபவம் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களிடம் இருந்துள்ளதை நாம் அறிவோம்.
உயிர் என்பது காற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் உயிரை கொடுத்தவர் தேவன். அவர் தமது ஜீவனை மனிதர்க்கு கொடுத்தார் என்பது விவிலிய போதனை. ஆகையினால் உயிர் காற்றோடு கலந்து போவதில்லை. தன்னை தந்த தேவனிடமே செல்லுகின்றது. நமது உயிர் இரத்தத்தில் உள்ளது. சுவாசிக்கும் காற்றினால் இரத்தம் உறையாதபடிக்கு தடுக்கின்றது. சுவாசத்தினால் இருதயம் இயங்கும்படி செய்யப்படுகின்றது. ஆனால் இரத்தத்தில் உள்ள உயிர் தேவன் கொடுத்தது ஆகும். அது காற்றினால் உருவாவது இல்லை. காற்றிலே கலந்து போவதும் இல்லை. இதனை உறுதிபடுத்தவே இயேசு தமது ஜீவனை பிதாவே உமது கைகளின் என் ஜீவனை ஒப்படைக்கின்றேன் என்று கூறுகின்றார்.
இயேசுகிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் உள்ள உறவை இது வெளிபடுத்துகிறதாயுள்ளது. பிதாவினிடமிருந்து வந்தவர் பிதாவிநிடமே திரும்ப போகின்றவர் தமது ஜீவனை பிதாவிடமே ஒப்படைக்கின்றார்.
மனிதர்களில் மனிதன் காற்றினாலும் அதாவது ஐந்து பஞ்ச பூதங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளான் என்று கூறி மரணமானது மனிதனை திரும்பபஞ்ச பூதங்களாகவே ஆக்குகின்றது என்று கூறி பஞ்சபூதங்களுக்கு ஒப்பாக்குகின்றனர்.
மனிதர்களில் இன்னும் சிலர் மனிதன் காற்றோடு இசைந்தவன். அவன் மரிக்கும்போது அவனின் இஉயிர் காற்றோடு கலந்துவிடுகிறது என்று கூறி காற்றுக்கு ஜீவனை ஒப்பாக்குகின்றனர்.
ஆனால் கிறிஸ்தவமோ மனிதனில் ஐந்து பஞ்சபூதங்கள் காணப்பட்டாலும் அவனுடைய ஜீவன் இவைகளோடு சேர்ந்ததாக இராது அவன் செய்த கிரியைகளுக்கு ஏற்றபடியாக தேவனுடைய கட்டுபாட்டுக்குள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவரை விசுவாசித்து நற்கிரியைகளை செய்கிறவர்கள் அவரின் பராமரிப்புக்குள்ளும், அல்லாதோர் பாதாளத்தில் நியாயதீர்ப்பின் நாள்வரை காக்கப்படும்படியாகவும் அடைக்கப்படுகின்றனர்.
இயேசுவைபோல இயேசுவோடு வாழ்ந்து பயணித்து நமது ஜீவன் அவருடைய பராமரிப்புக்குள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் புதிய பூமியில் அந்த ஜீவனை நாம் திரும்ப பெற்று நீடுழி வாழ்வோம்.
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 1யோவான் 3:14-16
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1யோவான் 5:11-13.நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். கொலோசேயர் 3:1-4