இயேசு ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்

இயேசு ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

Jews persecuted Jesus,and sought to kill Him, biecause He had done these things on Sabbath. (John 5:16)10
Mt12:2-8; Mk2:24; Mk3:4; Lk6:2; Lk13:14; Lk23:56; Ex20:8-11; Ex31:12-17; Neh13:15-21; Isa58:13; Jer17:21,27.

இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். (யோவான் 5:16(10))

மத்தேயு 12:2-8; மாற்கு 2:24; மாற்கு 3:4; லூக்கா 6:2; லூக்கா 13:14; லூக்கா 23:56; யாத்திராகமம் 20:8-11; யாத்திராகமம் 31:12-17; நெகேமியா 13:15-21; ஏசாயா 58:13; எரேமியா 17:21,27.

ஓய்வுநாள்:

1. இது தேவனுடையது. ஆதியாகமம் 2:2,3.
அவர் கிரியையை முடித்ததின் அடையாளம்.
அவர் ஓய்ந்திருந்த நாள்.
இது ஏழாம் நாள்.
இது ஆசீர்வாதத்தின் நாள்.
இது பரிசுத்தமான நாள்.

2. இது தேவனால் இஸ்ராயேலருக்கு தரப்பட்டது. யாத்திராகமம் 16:1-30.
இது கட்டளையை நிறைவேற்றும் நாள். இது மன்னா கிடைக்காத நாள். பரலோகமே ஓய்வை அனுசரிக்கும்போது எப்படி மன்னா பெய்யப்படும். யாத்திராகமம் 23
இது தேவனால் தரப்பட்ட நாள். யாத்திராகமம் 29.
இது மகிழ்ச்சியின் நாள். யாத்திராகமம் 31:17.
இது ஆசரித்தலின் நாள். யாத்திராகமம் 31:13.

3. இது கிறிஸ்துவ சபைகளுக்குரிய மிக முக்கியமான நாள்.
நியாயபிரமாணத்தின் சில விஜயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் 10 கட்டளைகள் நிராகரிக்கப்படவில்லை. ஓய்வுநாளும் நிராகரிக்கப்படவில்லை. ஆதிசபைகள் இதனை பின்பற்றியது.
7 ஆம் நாளை ஓய்வுநாளாகவும், முதலாம் நாளை கிறிஸ்துவின் நாளாகவும் ஆதிசபை அனுசரித்தது.
பிற்கால சபைகள் 7 ஆம் நாளை விட்டுவிட்டு முதலாம் நாளை கிறிஸ்துவின் நாளாகவும், ஓய்வுநாளாகவும் மாற்றிக்கொண்டது. தேவன் செய்யாத – மாற்றாத ஒன்றை எப்படி மனிதர்கள் மாற்றமுடியும். சனிகிழமையையும், ஞாயிற்றுகிழமையையும் ஆசரிப்பதில் தவறில்லை.
ஆதிசபை ஓய்வுநாளை தேவ வார்த்தைகளை பிரசங்கிக்கும் நாளாகவும், முதலாம் நாளை அப்பம் பிட்குதலின் நாளாகவும் மாற்றிக்கொண்டது.

4. ஓய்வுநாளில் நன்மை செய்யலாமா?
38 வருட வியாதியஸ்தன் சுகமாக்கப்பட்டதைவிடவும் படுக்கையை எடுத்துகொண்டு சென்றதே தவறாக காட்டப்பட்டுள்ளது.
ஓய்வுநாளில் படுக்கையை எடுத்துகொண்டு செல்வது பிரமாணத்தின்படி தடைசெய்யப்பட்டிருந்தது.
படுக்கையை எடுத்துகொண்டு போகச்சொன்னவர் இயேசு.
அதனால் யூதர்கள் இயேசுவிடம் தங்கள் கோபத்தை வெளிபடுத்தினர்.

ஓய்வுநாளில் நன்மை செய்யலாமா?செய்யலாம்.எப்படி?
– ஓய்வுநாளுக்காக மனுஷன் உண்டாக்கப்படவில்லை. மனிதனுக்காகவே ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
– ஓய்வுநாளுக்கு ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே.
– ஓய்வுநாள் நன்மை செய்வதற்கானது, வேலை செய்வதற்கானதல்ல.
– ஓய்வுநாள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நாள். மகிழ்ச்சியை – பொருள்களை பரிமாறிக்கொள்ளும் நாள்.
– ஓய்வுநாள் துராலோசனைகளை அரங்கேற்றும் நாளல்ல, தேவனுடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுக்கும் நாள்.
– நாள்கள் மாற்றப்பட்டிருந்தாலும் பொருள் மாற்றப்படவில்லை.
– ஓய்வுநாள் உண்டென்றால், சபை, போதகர், அமைப்புகள் நிச்சயம் உண்டு. அவைகளை சீர்படுத்தலாமேயன்றி சிதைக்கலாகாது.
– கேடுண்டாக்குகிற பாவங்களில் ஒன்று ஓய்வுநாளை மீறுவதாகும்.
– விவிலியத்தின் பல நியமங்கள், ஆசீர்வாதங்கள் ஓய்வுநாளை அடிப்படையாக்கொண்டே வருகிறது.
– ஓய்வுநாளை ஆசரிப்பதும், பரிசுத்தத்தில் நிலைத்திருப்பதும், கீழ்படிவதும், விசுவாசவாழ்வும் ஒரேகோட்டில் இணைந்து செல்பவையாகும்.

கர்த்தாவே, நீர் மனுக்குலத்துக்கு தந்த இந்த நல்ல நாளை நாங்கள் சனிநாள் என நினைத்து அவமடைய செய்துவிட்டோம். எங்களை மன்னியும். இந்த ஆசீர்வாதமான நாளை நாங்கள் இழக்காமல், வெறுக்காமல் மகிழ்ச்சியுடனும், திறந்த மனதுடனும் ஆசரித்து பழக உமது அருள் உருவாக இறைஞ்சுகின்றோம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME