இப்பொழுது இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது.

இப்பொழுது இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது.

Now is the judgment of this world. (John 12:31)

Jn5:22-27; J 16:8-10; Mt19:28; Act17:31; Act24:25; Rom2:2,16; Rom3:6; 1Cor6:2,3; 1Cor11:32; Heb10:27; 1Pet1:17; Rev14:7.

இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது, இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். (யோவான் 12:31)

யோவான் 5:22-27; யோவான் 16:8-10; மத்தேயு 19:28; அப்போஸ்தலர் 17:31; அப்போஸ்தலர் 24:25; ரோமர் 2:2,16; ரோமர் 3:6; 1கொரிந்தியர் 6:2,3; 1கொரிந்தியர் 11:32; எபிரெயர் 10:27; 1பேதுரு 1:17; வெளி 14:7.

உலகம் நியாயந்தீர்க்கப்படும்:
சடப்பொருளாகிய இவ்வுலகம் தீது என்பதினால் அல்ல, உலகம் நியாயதீர்ப்புக்கு காத்திருக்கிற சாத்தானுக்குள் விழுந்து கிடப்பதினால் இவ்வுலகம் நியாயந்தீர்க்கப்படும். தேவன் உலகை நன்மைக்காகவும், மனுஷனுக்காகவும் படைத்தார். சாத்தானுக்காக காரிருள் நிறைந்த நரகைப் படைத்தார். மனிதனுக்காக இவ்வுலகை படைத்தார். நரகை தீதாக கண்டவர் உலகை நன்றாயிருப்பதாக கண்டார். உலகம் சாத்தானுக்கு அடிமைப்பட்டு தீட்டுப்பட்டு போனதினால் சாத்தானோடுகூட உலகையும் நியாயதீர்ப்புக்காக வைத்தார். எனவே உலகம் நியாயதீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்.

உலகம் மட்டுமல்ல உலகில் உள்ளவைகள் யாவும் நியாயதீர்ப்புக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவேதான் உலகத்திலும் உலகில் உள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் என்று ஆவியானவர் கூறுகின்றார். உலகை பரிசுத்தவான்களைக்கொண்டும் நியாயந்தீர்க்கின்றார். கிறிஸ்துவில் உண்மை விசுவாசம் கொண்டுள்ளோர் நிகழ்காலத்திலேயே உலகை நியாயந்தீர்க்க முடியும். இதனை சபை சரித்திரங்களில் கண்டுள்ளோம்.மேலும் தாம் நியமித்த இயேசுவைக் கொண்டும் இறுதியானதும், தப்பிப்பிழைக்க வழியில்லாததும், அழிவுக்குரியதாக்குகிறதுமான நியாயதீர்ப்பைக் கொடுக்க இருக்கிறார்.

சாத்தானுடைய களத்துமேடாகிய இவ்வுலகம் பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும், அநியாயத்தினாலும், பொல்லாப்புகளினாலும், கொடுமையினாலும், அநீதிகளினாலும், தீமைகளினாலும், அசுத்தங்களினாலும் நிரம்பி காணப்படுகின்றது. நியாயதீர்ப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்த உலகில் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை பின்பற்றுகிறவர்கள் மட்டுமே வாழ தகுதியானவர்கள், யோக்கியர்கள், தூய்மையானவர்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை மட்டுமே தூய்மையான வாழ்விடம். நாம் தங்கும் இல்லம் கூட ஆகாமிய கூடாரம். அப்படியிருக்க நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டுள்ளவைகளோடு இணைந்து பிணைந்து வாழ்ந்து உலகோடு அழிவுக்குள் சென்றுவிடாதபடி அழியாமையை வாக்களித்துள்ள கிறிஸ்துவோடு இணைந்து பிணைந்து நித்திய வாழவை பெற வாஞ்சிப்போம்.

நியாயதீர்ப்பு அவருடைய வீட்டிலே துவக்கம் பெறும்.
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார். அப்போஸ்தலர் 17:30,31.

ADD YOUR COMMENT

Powered By Indic IME