நான் போகிற இடத்தையும், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்

நான் போகிற இடத்தையும், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்.

And where I go you know and the way you know. (John 14:4)

Mark 10:42; Mark 12:14; Luke 12:39; Luke 20:21; John 3:2; John 7:26; John 9:31; John 11:22; John 13:17; John 16:30; John 17:7; John 21:24; Acts 10:36; 1Thessalonians 5:2.

நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். (யோவான் 14:4)

மாற்கு 10:42; மாற்கு 12:14; லூக்கா 12:39; லூக்கா 20:21; யோவான் 3:2; யோவான் 7:26; யோவான் 9:31; யோவான் 11:22; யோவான் 13:17; யோவான் 16:30; யோவான் 17:7; யோவான் 21:24; அப்போஸ்தலர் 10:36; 1தெசலோனிக்கேயர் 5:2.

அறிந்திருக்கிறீர்கள்:
‘அறிதல்’ என்பதைக் குறித்து விவிலியம் சில காரியங்களைக் குறிப்பிடுகின்றது. உன்னத அறிவு அல்லது தெய்வீக அறிவு அல்லது ஆவிக்குரிய அறிவு, உலக அறிவு அல்லது கற்றறிவு, உடலறிவு அல்லது மாம்சீக அறிவு ஆகிய மூன்றுவிதமான அறிவுகள் குறித்து விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தினாலும் சீஷர்களோடு கொண்டிருந்த அன்னியோன்யத்தினாலும் தம்மை குறித்தும் பரலோக இராஜ்யம் குறித்தும் பிதாவைக் குறித்தும் சீஷர்களுக்கு இயேசு கற்பித்திருந்தார். சீஷர்கள் இயேசு பரலோகத்திலிருந்து வந்ததையும் திரும்பி போவதையும் அறிந்திருந்தார்கள். ஆனாலும் சில நேரங்களில் இந்த அறிவை கொண்டிராதவர்களாய் யூதர்களைப்போல சீஷர்கள் பேசியதுமுண்டு.

தேவன் தம்முடையவர்களை அறிந்திருக்கிறதுபோல தேவனுக்குரியவர்களும் தேவனைக் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

தகப்பன் தன் பிள்ளைகளைக் குறித்து அறிந்திருக்கிறதுபோல பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் விருப்பங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

ஊழியக்காரர்கள் தங்கள் மந்தையை குறித்து அறிந்திருக்கிறதுபோல மந்தைகளும் தங்கள் ஊழியக்காரனை குறித்து நன்றாக அறிந்திருக்க வேண்டும்.

மனுக்குலம் தேவனையும் தேவனுடைய இராஜ்ஜியத்தையும் குறித்த அறிவில்லாதிருந்ததினால்தான் தேவன் தமது குமாரனை உலகிற்கு அனுப்பி பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிரம்பியிருக்க வேண்டும் என்று விரும்பினார். சபையாகவும் குடும்பமாகவும் கர்த்தரை குறித்த வெளிப்பாடுகளையும் அறிவையும் வெளிப்படுத்தவே நாம் சபையாக குடும்பமாக அழைக்கப்பட்டுள்ளோம்.

அறிவடைவோம்; அறிவடைய செய்வோம்.
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். ரோமர்1:19-23.

ADD YOUR COMMENT

Powered By Indic IME