ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்.
Yes, Lord,I believe that You are the Christ,Son of God,who is to come into the world. (John 11:27)
Jn1:49; Jn4:42; Jn6:14,69; Jn9:36-38; Jn20:28-31; Mt11:3; Mt16:16; Lk7:19,20; Act8:37; 1Tim1:15,16; 1Jn4:3; 1Jn5:1,20.
அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
(யோவான் 11:27)
யோவான் 1:49; யோவான் 4:42; யோவான் 6:14,69; யோவான் 9:36-38; யோவான் 20:28-31; மத்தேயு 11:3; மத்தேயு 16:16; லூக்கா 7:19,20; அப்போஸ்தலர் 8:37; 1தீமோத்தேயு 1:15,16; 1யோவான் 4:3; 1யோவான் 5:1,20.
விசுவாசிக்கிறேன் ஆண்டவரே.
இயேசு கிறிஸ்து கூறிய 25,26 ஆகிய வசனங்ககளை மார்த்தாள் விளங்கிக்கொண்டாளோ இல்லையோ இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என்று கூறுகின்றாள். இந்த கூற்றானது 4 அறிக்கைகளைக் கொண்டதாக அமைகின்றது.
முதலாவது, ஆண்டவரே என்று அறிக்கையிடுகின்றாள். இதற்கு குரியோஸ் என்ற மூலச்சொல். இச்சொல் ப.ஏ ல் 748 தடவைகள் வந்துள்ளது. ஒரு செயலையோ, காரியத்தையோ தீர்மானிக்கும் அதிகாரம் உடையவர், எஜமான் என்று பொருளாகும். இயேசுவே நீரே என் சகோதரனின் ஜீவனைக் குறித்து தீர்மானிக்கிறவர் என்கிறாள்.
2 வதாக, உலகத்தில் வருகிறவர் என்று அறிக்கையிடுவதாகும். இக்கூற்றானது யூதர்களின் அதீத நம்பிக்கையாகும். வருவேன் என்று சொன்னவர் நீர்தான். அதனால் நீரே வருகிறவர் என்று கூறுகின்றாள். இயேசு வந்தவரும், வருகிறவரும், வரப்போகிறவருமாயிருக்கிறார். உலகத்தில் வருகிறவர் என்பதினால் லாசருவின் உயிர்ப்பை நிகழ்கால சம்பவமாக மாற்றப்போகிறார் என்று அறிக்கையிடுகிறாள்.
3 வதாக, தேவகுமாரன் என்று அறிக்கையிடுகின்றாள். இயேசுவை மனிதகுமாரனாக கண்ட யூதர்கள் மத்தியில் இயேசுவை தேவ குமாரனாக காணும் மன காட்சி சாதாரணமானதல்ல. தேவனுடைய குமாரனாகிய இயேசுவே நீர் உம் தந்தையிடம் கேட்கும் எதையும் அவர் உமக்கு தந்தருளுவார் என்று அறிக்கையிடுகின்றாள். தேவனுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவை நம்பாத யூதர்கள் மத்தியில் இயேசுவே ஜீவனுள்ள தேவ குமாரன் என்று பேதுருவைப் போல அறிக்கையிடுகின்றாள். எனவே தன் சகோதரன் குறித்து பிதாவிடம் கேட்பதைப் பெறுவார் என்று கூறுகின்றாள்.
4 வதாக, கிறிஸ்து என்று அறிக்கையிடுகின்றாள். இயேசு மரணத்தினின்று எழும்பிய பின்புதான் அவரை ஆண்டவர் என்றும், கிறிஸ்து என்றும் அழைத்தனர். ஆனால் அதற்கு முன்பதாகவே மார்த்தாள் அவரை ஆண்டவர் என்று அழைத்தவள் இப்பொழுது கிறிஸ்து என்றும் அழைக்கின்றாள். கிறிஸ்து என்றால் கிறிஸ்டோஸ் என்று கிரேக்கத்திலும், மேசியா என்று எபிரேயத்திலும் அழைக்கப்படுகிறார். இதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருளாகும். தேவனால் உலகிற்கு வாக்களிக்கப்பட்டவரும், யூதர்களால் எதிர்பார்க்கப்பட்டவரும் இவரே. இவர் வந்து மரித்தோரை எழுப்புவார் என்பது ஐதீகம். எனவே நீர் என் சகோதரனை உயிரோடு எழுப்ப போவதினால் நீரே கிறிஸ்து என்று அறிக்கையிடுகின்றாள்.
அன்பானவர்களே நமது விசுவாச அறிக்கை நம் சந்ததிக்கு விசுவாசத்தை ஊட்டுகிறதாக இருக்கிறதா? விசுவாச பிரமாணங்களெல்லாம் பல பரிசுத்தவான்களின் அறிக்கையாகும். இதுவே நமக்கு திருஷ்டாந்தங்களாக இருக்கின்றன. நமது அறிக்கைகள் நமது சந்ததிகளுக்கு திருஷ்டாந்தங்களாக அமையட்டும்.
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும் படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31.