ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.
Jesus said,Most assuredly,I say to you,before Abraham was,I Am. (John 8:58)
Jn1:1,2; Jn17:5,24; Col1:15-18; Heb1:10-12; Heb13:8; Rev1:11,17,18; Rev2:8; Pr8:28-30; Mic5:2; Ex3:14; Isa3:13; Isa44:6,8; Isa48:12.
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58)
யோவான் 1:1,2; யோவான் 17:5,24; கொலோசெயர் 1:15-18; எபிரெயர் 1:10-12; எபிரெயர் 13:8; வெளி1:11,17,18; வெளி 2:8; நீதிமொழிகள் 8:28-30; மீகா 5:2; யாத்திராகமம் 3:14; ஏசாயா 3:13; ஏசாயா 44:6,8; ஏசாயா 48:12.
நான் இருக்கிறேன்:
இயேசுகிறிஸ்து ஆபிரகாம் தோன்றவதற்கு முன்னதாகவே இருக்கிறார் என்பதற்கான சில விவிலிய ஆதாரங்களைக் கவனிப்போம்.
- சிலர், இயேசுகிறிஸ்து ஆபிரகாமுக்கு முன்னமேயே மத்தியஸ்தராயிருந்தார் என்கின்றனர்.
- ஆதியாகமம் 3:16 ல் ஸ்திரீயின் வித்தாக அறியப்பட்டார்.
- அவர் தேவ ஆட்டுகுட்டியாக – பஸ்கா ஆடாக – பாவமில்லாத ஆடாக – ஈசாக்குக்கு பதிலாக பலியிடப்பட்ட ஆடாக அறியப்பட்டார்.
- நீதிமொழிகளில் பூமி உண்டாகப்படும்போது ஞானமாக இருந்ததாக அறியப்பட்டார்.
- தீர்க்கதரிசனங்களின்படி இயேசு ஒரு தீர்க்கதரிசியாக அறியப்பட்டார்.
- யோவான் சுவிசேஷத்தின்படி ஆதி வார்த்தையாக அறியப்பட்டார். இயேசு இருளை போக்கும் ஒளியாக அறியப்பட்டிருந்தார்.
- இன்னும் பல…
நான் இருக்கிறேன் என்று இயேசு கூறியதில் ஒருசில உண்மைகள் காணப்படுகின்றன. - யாத்திராகமம் 3:14 ன்படி தேவனுக்கு சமமானவர் என்றோ, தேவமகன் என்றோ அறியலாம்.
- இயேசு மனுஷரூபத்தில் வந்தாலும் தெய்வத்துவமானவர் என்று அறியலாம்.
- இயேசு நித்தியமாய் இருக்கிறார் என்று அறியலாம்.
- மனுக்குலம் இவரை பின்பற்றித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் தரப்பட்டுள்ளது.
- மனுஷ உள்ளங்களையும், உலக ஆழங்களையும், சாத்தான்களின் ஆழங்களையும் அறிந்திருப்பவர் எனலாம்.
- இவரை பற்றிக்கொள்ளும்போது இவருடைய தன்மைகள் நம்மிலும் உண்டாகி யாவையும் அறிகிற அறிவை அடைகிறோம்.
- இந்த இயேசுவை நம்புங்கள்…
இவர் மட்டுமே ஆதியானவர்…
மீதியெல்லாம் பாதியானவைகள்…
இதை புரிந்துகொண்டால் நீதியாவாய்…
கர்த்தாவே உம் மகனைக்கொண்டு எங்களுடைய ஆதி நிலைமையை உணர வைத்து தேவனோடு எங்களை இணைத்து தேவ பிள்ளைகளாக வளர வைப்பதற்காய் நன்றி.