ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்

ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

You also will bear witness, because you have been with Me from the beginning. (John 15:27)

John 21:24; Luke 24:48; Act 1:8,21,22; Act 3:15; Act 4:20,33; Act 10:39-42; Act 13:31; Act 18:5; Act 23:11; 1Peter 5:1,2; 2Peter 1:16-18; 1John 1:2; Revelation 1:2,9.

நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். (யோவான் 15:27)

யோவான் 21:24; லூக்கா 24:48; அப்போஸ்தலர் 1:8,21,22; அப்போஸ்தலர் 3:15; அப்போஸ்தலர் 4:20,33; அப்போஸ்தலர் 10:39-42; அப்போஸ்தலர் 13:31; அப்போஸ்தலர் 18:5; அப்போஸ்தலர் 23:11; 1பேதுரு 5:1,2; 2பேதுரு 1:16-18; 1யோவான் 1:1,2; வெளி 1:2,9.

எனக்கு சாட்சிகள் நீங்கள்:

இயேசு கிறிஸ்து பிதாவின் சாட்சியமாயும், நிரூபணமாயும் இருக்கிறார். அதைபோலவே இயேசுகிறிஸ்துவின் சீஷர்களும் இயேசுகிறிஸ்துவின் நிரூபணமும், சாட்சியமுமாயிருக்கிறார்கள். இயேசு தமது சீஷர்களை தமக்கு சாட்சியங்களாக இருப்பதற்காகவே ஏற்படுத்தினார். அவரோடு இருந்தவர்களும், அவரை அறிந்தவர்களுமாகிய சீஷர்கள் அவருடைய பரமேறுதலுக்கு பின்பதாக இருளின் மத்தியில் வெளிச்சமாகவும், மரணத்தின் மத்தியில் ஜீவனாகவும், சாபங்களின் மத்தியில் ஆசீர்வாதமாகவும், பாடுகளின் மத்தியில் சந்தோஷமாகவும் சாட்சியமாயிருக்க ஏற்படுத்தப்பட்டனர். அவர்கள் அவ்விதமாகவே அப்போஸ்தலர் 1:8 ன் படி எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும் சாட்சிகளாக இருந்தார்கள்.

அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பழுதில்லாத – பாவமில்லாத வாழ்வுக்கு சாட்சிகளாயிருந்தார்கள். இயேசுவின் உபதேசங்கள் குறித்து சாட்சிகளாயிருந்தார்கள். இயேசுவின் அற்புத கிரியைகள் குறித்து சாட்சிகளாயிருந்தார்கள். அவருடைய பாடுமரணம் குறித்து சாட்சிகளாயிருந்தார்கள். அவரின் உயிர்த்தெழுதல், பரமேறுதல் குறித்து சாட்சிகளாயிருந்தார்கள். அவரின் ரகசிய வருகை மற்றும் இரண்டாம் வருகை குறித்து சாட்சிகளாயிருந்தார்கள். விவிலியம் என்பதே அவர்களுடைய சாட்சியங்களின் வெளிப்படையான நிரூபணமாகும். அப்போஸ்தலர்களை கொன்றார்கள். ஆனால் அவர்களுடைய நூல்களை இன்றுவரையிலும் ஒருவராலும் அழிக்க முடியவில்லை. மேலும் அவர்களுடைய சாட்சியமாக சபைகளையும் ( கூடுகைகளையும் – பலர் சேர்ந்திருப்பதே சபை) ஏற்படுத்தினார்கள். அதனை இன்றுவரையிலும் ஒருவராலும் அழிக்க முடியவில்லை. அவரை ஏற்றுகொள்ளும் சபைகளில் உள்ள ஒவ்வொருவரும் அவர் உயிரோடிருக்கிறார், மீண்டும் வரப்போகிறார் என்பதற்கான சாட்சியங்களே.

நாம் அவருடைய சாட்சிகள். நம்மில் அவர் நடப்பிக்கும் கிரியைகளே அவர் உயிரோடிருக்கிறார், வரப்போகிறார் என்பதற்கான சாட்சியங்கள்.

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாய் இருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. 1தெசலோனிக்கேயர் 1:5-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME