ஆண்டவரே

ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்.

They said to Him,Lord,give us this bread always.(John 6:34)
Ps4:1-8(6); Job7:7,15,23; Ps16:11; Ps80:3,7,19; Ps119:135; Isa33:16; Act2:42,46.

அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். (யோவான் 6:34)

சங்கீதம் 4:1-8(6); யோபு7:7,15,23; சங்கீதம் 16:11; சங்கீதம் 80:3,7,19; சங்கீதம் 119:135; ஏசாயா 33:16; அப்போஸ்தலர் 2:42,46.

ஆண்டவரே அப்பம் தாரும்:

இஸ்ராயேலர் இயேசுவிடம் இக்கேள்வியை கேட்ட காரணம் என்ன?
– இயேசு அறிவித்த அப்பம் மன்னாவைவிட மேலானது போன்று தெரிந்ததினால்.
– இயேசு கூறிய அப்பம் ஜீவன் கொடுக்கும் என்று நம்பியதினால்.
– இயேசு கூறிய அப்பத்தை மன்னாவை போன்ற ஒன்று என்று நினைத்ததினால். ஏனெனில் பின்னர் யாவரும் பின்வாங்கிபோயினர்.வச60.

பழைய ஏற்பாட்டில் நீதிமொழிகள் 30:9 ல் ‘என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும் என்று சாலொமோன் பிரார்த்தித்ததாக அறிகிறோம்.

இயேசுகிறிஸ்து மத்தேயு 6:11 ல் ‘ எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்’ என்று ஜெபிக்க வேண்டும் என்று கற்று கொடுத்துள்ளார்.

பவுல் அப்போஸ்தலர் 14:17 ல் ‘ஆகாரத்தினாலும், சந்தோஷத்தினாலும்… நிரப்பி….’ என்று கூறுகின்றார்.

ஆண்டவர் அப்பம் கொடுக்கிறார். தகப்பனிடம் பிள்ளையானவன் அப்பம் கேட்டால் தகப்பன் கல்லை கொடுப்பதில்லை. அதுபோலவே தேவனும் தம்மிடம் மன்றாடுவோருக்கு அனுதின அப்பத்தை கொடுக்கிறார். இதனை உணர்ந்த தாவீது தேவபிள்ளைகள் அப்பத்திற்காய் இரந்து திரிந்ததை நான் பார்த்ததில்லை என்கிறார்.

பூமியை கொடுத்தவரும் அவரே, மழையை பெய்ய செய்பவரும் அவரே, ஆகாரத்தை விளையச் செய்பவரும் அவரே, உயிரினங்களை போஷிப்பவரும் அவரே.

நாம் நம் தேவனின் கட்டளைகளுக்கு கீழ்படிய மனமில்லாது, பொல்லாப்பானவைகளை செய்து, தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட காரணமாயிருந்து அயோக்கியமானவைகளில் தன்னை உட்படுத்திக்கொண்டு, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையையும் சாக்கிரமெந்துகளையும் அவமானபடுத்துவோமெனில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிப்பார் என்பதையும் மறக்க வேண்டாம்.
எரேமியாவின் புலம்பல் கூட பாட பெலன் இல்லாது போய்விடும்.

திரும்புங்கள்… திக்கெட்டுமல்ல, தியாகசீலர் இயேசுவிடம் திரும்புங்கள்.

கர்த்தாவே, உம் அன்புக்காய், ஆதரவுக்காய் நன்றி. நன்றாய் போஷித்தீர், வளர்த்தினீர், பெரியவர்களாக்கினீர். நாங்கள் உம் சிலுவையை சுமந்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை எடுத்துசெல்ல பெலமுள்ளவர்களாக்கினீர். இதனை நாங்கள் மறவாது இறுதி மூச்சுவரை உம்பணிசெய்ய உம் குமாரனின்மூலம் கிருபை செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME