அந்நியனின் சத்தத்தை அவைகள் அறியாதபடியால் அவனை விட்டு ஓடிப் போகும்.
[responsivevoice_button voice=”Tamil Male” buttontext=”Play” ]
They will by no means follow a stranger,flee from him,for they do not know voice of strangers. (John 10:5)
1Kin22:7; Pr19:27; Mk4:24; Eph4:11-15; Col2:6-10; 2Tim3:5-7; 2Tim4:3; 1Pet2:1-3; 1Jn2:19,21; 1Jn4:1-6; Rev2:2.
அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்
(யோவான் 10:5)
1இராஜாக்கள் 22:7; நீதிமொழிகள் 19:27; மாற்கு 4:24; எபேசியர் 4:11-15; கொலோ 2:6-10; 2தீமோத்தேயு 3:5-7;4:3; 1பேதுரு 2:1-3; 1யோவான் 2:19,21; 1யோவான் 4:1-6; வெளி 2:2.
ஓடிப்போகும் ஆடுகள்:
ஏன் ஆடுகள் ஓடிப்போகின்றன? வழி நடத்தியவன் அந்நியன். அவனுடைய உண்மையான குரல் கள்ளத்தனமான குரல். ஆகவே ஆடுகள் அவனிடம் நிலை நிற்காமல் ஓடிப்போயின. ஆடுகள் மேய்ப்பனை செம்மையாய் அறிந்திராவிட்டால் ஆடுகள் ஏமாற்றப்படும்.
ஆடுகள் எங்கே ஓடிப்போகின்றன? தாங்கள் அழைத்துவரப்பட்ட தொழுவத்துக்கு ஓடிப்போயின. மேய்ப்பனால் இடறிப்போகிற ஆடுகள் சிதறிப்போகவும் நேரிடும். எனவே, ஆடுகள் அல்ல, மேய்ப்பவனே முக்கியமானவனாக கருதப்படுகின்றான்.
ஆடுகள் மேய்ப்பனை அறியக்கூடிய மனப்பக்குவம் இரண்டு விதங்களில் உண்டாகின்றது. ஒன்று ஆடுகள் தேவ ஆவியை பெற்றிருப்பதினால், இரண்டாவது பிரதான மேய்ப்பனையும், அவருடைய தன்மைகளையும் அறிந்திருப்பதினால். இப்படிப்பட்ட ஆடுகள் தங்களை மேய்க்கும் மேய்ப்பனைக் குறித்து நன்றாய் அறிந்திருக்கும். மேய்ப்பன் தேவனால் நியமிக்கப்பட்டவன் அல்ல என்றும், கள்ளத்தனமானவன் ஈனத்தனமானவன் என்றும் அறிந்தும் அந்த மேய்ப்பனோடு தொந்திப்பாய் இருப்பவர்கள் இச்சைகளுக்கேற்ற போதகர்களை தெரிந்துக்கொண்ட ஆடுகளாகவே கருதப்படுவர்.
அந்நியநுகத்தில் பிணைக்கப்படாதவன், அந்நிய போதனைகளுக்கு செவி சாய்க்காதவன், அந்நிய அக்கினியை பயன்படுத்தாதவன், அந்நிய மார்க்கத்தை பின்பற்றாதாவன் மட்டுமே நல்ல மேய்ப்பனாக இருக்கிறான். மேய்ப்பன் பிரதான மேய்ப்பனாகிய கிறிஸ்துவின் சத்தத்தை பிரதிபலிக்கவே அழைக்கப்பட்டுள்ளான். தன் சொந்த குரலையல்ல, உலத்தின் குரலையல்ல, சாத்தானின் குரலையல்ல, பொய்யான – மாய்மாலமான குரலையல்ல இயேசுகிறிஸ்துவின் குரலையே தொனிக்க வேண்டும். ஆடுகள் ஏற்கனவே அந்த சத்தத்தில் பழகிப்போனவைகள். எனவே மேய்ப்பனே தேவ சத்தம் அறிந்து ஆடுகளை நடத்த வேண்டும். என்றால் சிதறிப்போகாது.
கர்த்தாவே மேய்ப்பர்கள் கிறிஸ்துவைபோல மந்தைகளை மேய்ப்பதற்கு ஏற்றவாறு தகுதிபடுத்தி சபைகளில் நிலை நிறுத்தச் செய்ய இறைஞ்சுகின்றோம்.