அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்க வேண்டுகிறேன்.
all may be one in Us, that the world may believe that You sent Me. (John 17:21)
John 10:16; Act 2:46,47; Act 4:32; Romans 12:5; 1Corinthians 1:10; 1Corinthians 12:12,25-27; Galathians 3:28; Ephesians 4:3-6; Philippians 1:27; Philippians 2:1-5; Colossians 3:11-14; 1Peter 3:8,9.
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17:21)
யோவான் 10:16; அப்போஸ்தலர் 2:46,47; அப்போஸ்தலர் 4:32; ரோமர் 12:5; 1கொரிந்தியர் 1:10; 1கொரிந்தியர் 12:12,25-27; கலாத்தியர் 3:28; எபேசியர் 4:3-6; பிலிப்பியர் 1:27; பிலிப்பியர் 2:1-5; கொலோசெயர் 3:11-14; 1பேதுரு 3:8,9.
ஒன்றாயிருங்கள்:
சீஷர்கள் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை இங்கே குறிப்பிடுகின்றார். பிதா கிறிஸ்துவை உலக இரட்சகராக இவ்வுலகத்திற்கு அனுப்பினார் என்பதை இவ்வுலக மக்கள் விசுவாசிக்கும்படியாக சீஷர்கள் ஒன்றாயிருக்க வேண்டும். ஒரே விசுவாசமே உண்டு என்பது விவிலிய போதனை. ஒரே விசுவாசத்திற்குரிய அடிப்படை சத்தியத்தியமாகிய இந்த செய்தியை பிளவுபட்ட மனநிலையில் அல்ல, ஒன்றிக்கப்பட்ட மனநிலையில் கொண்டுபோக வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
இந்த ஒன்றிப்பானது எப்படியிருக்க வேண்டும் என்றுக் கூறுகின்றார். அதாவது பிதா கிறிஸ்துவிலேயும், கிறிஸ்து பிதாவிலேயும் ஒன்றித்திருப்பதுபோல சீஷர்கள் ஒருவரிலொருவர் சார்ந்து வாழ வேண்டும் என்கிறார். திரித்துவத்தை விலாவாரியாக உபதேசிக்கும் தேவ மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒன்றித்து காணப்படாததின் ரகசியம் என்ன? பிதா, கிறிஸ்து, ஆவி ஒன்றித்திருந்து உலகிற்கு இரட்சிப்பை கொண்டு வந்ததுபோல சீஷர்களும் ஒன்றித்திருந்து இரட்சிப்பை இவ்வுலகிற்கு கொண்டு வர வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் ஐக்கியமாயிருப்பதற்கு நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். ஒருவருக்கொருவர் விரோதமாக முறையிடாதிருங்கள். ஒருவரையொருவர் கனம் பண்ணுங்கள். தங்களை விடவும் வயதில் பெரியவர்களுக்குரிய கனத்தை செலுத்துங்கள். மாறுபாடான உபதேசத்தை விவிலியம் போதிக்கவில்லை. மாறுபாடான உபதேசங்கள் யாவும் மாம்சத்திலிருந்தும் உலகத்திலிருந்தும் பிசாசுகளிடமிருந்தும் உண்டானவையே. உபதேசம் ஒன்று மட்டுமே. அது இயேசு மட்டுமே உலகை இரட்சிக்கிறார் என்பதாகும். இந்த அடிப்படையில் தேவனுடைய ஊழியக்காரர்கள் பேதமைகளை மறந்து ஒன்றிணையுங்கள்.
வித்தியாசமான அனுபவங்கள் உண்டு. இந்த அநுபவங்களை ஒன்றிணைத்து ஐக்கியம் காண்பவர் ஆவியானவரே. அந்த ஆவியானவர் ஒருவரே. அவர் கொடுக்கின்ற ஈவுகளை கொண்டு பிறிதொருவரை அற்பமாய் எண்ணாதிருங்கள். அது ஆவியானவருக்கு விரோதமான பாவமாக மாறி ஆபத்தை விளைவிக்கும்.
நாம் வெவ்வேறு சபைகளாக காணப்பட்டாலும் ஒரே பிதா, ஒரே கிறிஸ்து, ஒரே ஆவி தான் உண்டு. அப்படியானால் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும் உண்டு என்ற மனநிலைக்கு மாறுவோம்.
ஒன்றித்து வாழ ஆயத்தமா?
உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். ரோமர் 12:3-8..
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:1-5.