எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்

If you forgive the sins of any, they are forgiven them; if you retain the sins of any, they are retained. (John 20:23) 

Matthew 16:19; Matthew 18:18; Mark 2:5-10; Acts 2:38; Acts 10:43; Acts 13:38,39; 1Corinthians 5:3-5; 2Corinthians 2:1-11; Ephesians 2:19-22; 1Timothy 1:20.

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். (யோவான் 20:23) 

மத்தேயு 16:19; மத்தேயு 18:18; மாற்கு 2:5-10; அப்போஸ்தலர் 2:38; அப்போஸ்தலர் 10:43; அப்போஸ்தலர் 13:38,39; 1கொரிந்தியர் 5:3-5; 2கொரிந்தியர் 2:1-11; எபேசியர் 2:19-22; 1தீமோத்தேயு 1:20. 

மன்னிப்பு…
மன்னிப்பைக் குறித்து பொதுபடையாக நாம் தியானிக்காது இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு கூறிய மன்னிப்பின் மாண்பைக் குறித்து மட்டுமே தியானிக்கின்றோம். அதாவது சீஷர்களாகிய நீங்கள் எவர்களின் பாவங்களை அகற்ற விரும்புகிறீர்களோ அவர்களுக்கு அது அகற்றப்படும். எவர்களுடைய பாவங்களை அகற்ற விரும்பவில்லையோ அது அவர்களுக்கு அகற்றப்படுவதில்லை என்று கூறுகின்றார். இந்த காலை பொழுதில் மன்னிப்பு குறித்து மிக முக்கியமான 3 காரியங்களை நாம் அறிந்தாகப் போகின்றோம். 

முதலாவது, மன்னிப்பை அவரே கண்ட்றோல் பண்ணுகிறார். காரணம் தேவன் மனிதர்களுக்குரிய மன்னிப்பை பிரமாணங்களினூடாக வெளிபட்ட தேவகுமாரனின் இரத்தத்தினாலே உருவாக்கியது ஆகும். மன்னிப்பானது அவரின் மேற்பார்வையில் அமைந்துள்ளது. செயல்படுத்துகிறவர்களை அவரே மேற்பார்வையிடுகிறார். 

இரண்டாவது, பாவிகள் மீட்கப்படுவதில் தேவனால் அபிஷேகம் பெற்ற ஊழியர்களுக்கும் அதிகாரம் உள்ளது. பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் இருந்ததுபோலவே மனுகுலத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில் ஊழியர்களும் அடங்குவார்கள். தேவன் தமது ஆவியை அவர்களுக்கு கொடுத்திருப்பதினால் பாவமன்னிப்பு பெறதக்க இருதயத்தை அவர்கள் அறிகிறார்கள். அப்போஸ்தலர் 14:19. 

மூன்றாவது, ஊழியர்கள் தேவனாலும், தேவனால் அபிஷேகம் பெற்றவர்களால் நியமிக்கப் படுகிறவர்களாகையினாலும் அவர்கள் செய்வதை தேவன் அங்கீகரிக்கின்றார். தேவனுடைய மனிதர்கள் தவறுவதில்லை என்ற சிந்தனை தேவனிடம் உள்ளத்தினால் அவர்களின் செயலை அங்கீகரிக்கின்றார். 

தேவனுடைய மனிதர்கள் மூன்று விதங்களில் பாவங்களை மன்னிக்க காரணமாகின்றார்கள். 

முதலாவது, தேவனோடும், பரிசுத்த ஆவியோடும் இணைந்து சுவிசேஷ பணியை செய்து பாவிகளை மனந்திரும்ப செய்து பாவங்களை பரிகரிக்கின்றார்கள். 

இரண்டாவது, விசுவாசிகளை சத்தியத்திற்குள்ளும், பக்திக்குள்ளும் நடத்தி பாவங்களை, குற்றங்களை, பிழைகளை, தவறுகளை நீக்குகிறார்கள். 

மூன்றாவது, சத்தியத்துக்கு விரோதமானவர்கள் மீது தேவனால் ஆக்கினைதீர்ப்பு உண்டாகும்போதோ, அல்லது அதற்கு முன்போ அவர்களுக்காய் தேவனிடம் பரிந்துபேசி, மன்றாடி பாவங்களை பரிகரிக்க காரணமாகின்றார்கள். 

ஆகையினால்தான் தேவனுடைய மனிதர்களுக்கு எதிராக வார்த்தைகளை பேசாதபடிக்கும், கிரியைகளை செய்யாதபடிக்கும் விசுவாசிகளும் பிற ஊழியர்களும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். 
தேவன் தமது குமாரனின் ஸ்தானத்திலே தமது வேலையாட்களை வைத்துள்ளார். அவர் வருவது வரையிலும் அவர்கள் அத்திருப்பணியை செய்யதக்கவர்களாவர். அப்படிபட்ட உங்கள் போதகராகிய அவர்களுக்கு கீழ்படிந்து, அவர்களை கனபடுத்தி, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை போஜித்து , அவர்கள் குடும்பத்தை ஆதரித்து வரும்போது தேவனின் நன்மைகள் சொந்தமாகும். 

மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. எபேசியர் 4:11-16.

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1பேதுரு 4:7-11.

ADD YOUR COMMENT

Powered By Indic IME