அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.

அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்.

He who says he abides in Him ought himself also to walk just as He walked. (1John 2:6)

1John 1:7; Matthew 11:29; John 13:15; 1Corinthians 11:1; Ephesians 5:1,2; Ephesians 3:16,17; 1Peter 2:21; Psalms 85:13.

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். (1 யோவான் 2:6)

1யோவான் 1:7; மத்தேயு 11:29; யோவான் 13:15; 1கொரிந்தியர் 11:1; எபேசியர் 5:1,2; எபேசியர் 3:16,17; 1பேதுரு 2:21; சங்கீதம் 85:13.

அவரைப்போல் நட…

இயேசு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன் இயேசு நடந்தபடியே நடக்க வேண்டும். இதன் பொருளை இருவிதங்களில் புரிந்துக் கொள்கிறார்கள். ஒன்று இயேசு செய்ததுபோல அற்புதங்கள் நடக்க வேண்டும் என்பதாகும். இன்னொன்று இயேசு பேசியதைப்போல பேச வேண்டும் என்பதாகும். இவ்விதம் செய்வதும் பேசுவதும் நல்லதுதான். ஆனால் இவைகளைவிட வேறு இரு காரியங்களையும் இப்பகுதி போதிக்கின்றது என்பதை மறவாதிருப்போமாக. ஒன்று Imitation. அதாவது இயேசுவை மறு பிரதியாக காண்பித்தல் ஆகும். தோற்றத்திலும், சாயலிலும் இயேசுவைப்போல காணப்படுவது ஆகும். கிறிஸ்து நாதர் அனுசாரம் என்ற நூலை படிக்கவும். இன்னொன்று இயேசுவை பின்பற்றுதல் ஆகும். இதனை பின்தொடர்தல் என்றும் கூறலாம். அவரது அடிச்சுவடுகளை ஒற்றி நடத்தல் ஆகும்.

இவைகளையெல்லாம் சுருக்கமாக சொல்லுவோமெனில் இயேசுவின் தன்மைகளைக் கொண்டிருத்தல் ஆகும். தோற்றத்தில் இயேசுவை போலிருந்தாலும் நற்கிரியைகளில் இயேசுவைப் போல காணப்பட்டாலும் அவருடைய தன்மைகளை – குணங்களை பிரதிபலிக்கிறவர்களாக காணப்படுவதே சிறப்பானது. அவர் உயர்ந்தவராயிருந்தாலும் தாழ்மையை தரித்தவராய் எளிமையாக நடந்தார். அவர் வல்லமை அதிகாரம் ஆற்றல் உடையவராயிருந்தாலும் துன்பங்களையும் ஏழ்மையையும் பசி தாகம் போன்றவைகளையும் பலவீனங்களையும் சகித்து முன்னேறினார். சிங்காசனத்தில் இருக்கவேண்டியவராயிருந்தும் சிலுவையில் தொங்குவதையே தெரிந்துக்கொண்டு அதற்கு நேராய் பயணித்தார்.

நாம் இந்த பூமியில் பிறந்தது உண்மைதான். ஆனாலும் நாம் பரலோகத்திற்கு பயணிக்கிறவர்களாயிருப்பதினால் நமக்கு முன்னதாக பயணித்த இயேசுவை பின்பற்றி அவரைப்போல வாழ்ந்து முன்னேறினால் மட்டுமே பரலோகத்துக்கு பயணிக்க முடியும். நமது நடக்கை குணங்கள் தன்மைகள் யாவும் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை தீர்மானிக்கின்றது.

கிறிஸ்துவை பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். அவரையே பின்பற்றுவோம். பணம், பதவி, அதிகாரம் கிடைத்திருந்தாலும் சிலுவை பயணத்தையே தொடருவோம். அப்பொழுதுதான் சிங்காசனத்துக்கு உயர முடியும்.

அவரைப்போல் நட…. ஏனெனில்…
நாம் அவரிடம் போவதற்காகவே பயணிக்கிறோம்….
பிதாவாகிய தேவன் தமது குமாரனின் சாயல் தன்மைகளை கொண்டிருப்பவர்களை மட்டுமே தம் இராஜ்யத்தில் சேர்க்கிறார்….
நாம் மட்டுமே அவரிடம் சேர்க்கப்படுகிறோம். நமக்குரியது ஒன்றும் அவரிடம் சேர்க்கப்படுவதில்லை….
நாம் மண்ணுக்குரியவர்களல்ல, விண்ணுக்குரியவர்கள்…..

சில கேள்விகள்…..
இயேசுவைபோல நடப்பது எளிதான காரியமா?
இயேசு கோபப்பட்டதுபோல நாமோ நமது தலைவர்களோ கோபப்படுவதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எளிமையான வாழ்க்கைமுறை ஆசீர்வாதமான வாழ்க்கை முறையா?

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசேயர் 2:6,7

தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள். 1தெசலோனிக்கேயர் 2:11,12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME