அவரைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் அவர் தீர்க்கதரிசி

அவரைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய்? அவர் தீர்க்கதரிசி

What do you say about Him because He opened your eyes?He said,He is a prophet. (John 9:17)

Jn4-:19; Jn6:14; Mt16:14; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk9:19; Lk24:19; Act2:22; Act3:22-26; Act10:38

மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். (யோவான் 9:17)

யோவான் 4-:19; யோவான் 6:14; மத்தேயு 16:14; மத்தேயு 21:11; மாற்கு 6:15; லூக்கா 7:16; லூக்கா 9:19; லூக்கா 24:19; அப்போஸ்தலர் 2:22; அப்போஸ்தலர் 3:22-26; அப்போஸ்தலர் 10:38.

அவர் தீர்க்கதரிசி:
தீர்க்கதரிசி என்றால் தேவனுக்காய் மனிதரிடத்தில் நிற்பவர் என்று பொருள். தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியினால் மட்டுமே பேசமுடியும். இயேசுகிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி என்று விவிலியம் கூறுவதில் உள்ள சில உண்மைகளை அறிய வேண்டும்.

இயேசுகிறிஸ்து தேவனின் ஆதி வழுவாதன்மையை வலியுறுத்தினார். கடந்துபோன நிகழ்வுகளில் தேவனின் கிரியைகளை எடுத்துகூறி எச்சரித்தார்.
வரப்போகிற காரியங்களின் நிகழ்வுகளை முன்னதாகவே அறிவித்தார்.

பாவங்களை கண்டித்து தேவனின் நீதியை அறிவித்தார்.
நிகழ்கால நிகழ்வுகளின் உண்மைதன்மையை அறிவித்தார்.
தன்னை கொலைசெய்ய தேடினாலும் தேவன் முன்னிலையில் நிற்பதிலிருந்து அசைவுறவில்லை.

இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசியாய் இருப்பதினால் அவர் சொல்லியுள்ளபடி தான் சகலமும் நடந்தேறும். அதில் எவ்வித தடுமாற்றமும் ஏற்படுவதில்லை. எனவே இயேசுவை மட்டுமே நாம் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம்.

தன்வாழ்வில் பெரிய காரியங்களை செய்தபடியினால் இயேசுவை தீர்க்கதரிசியாக கண்டான் குருடன். உன்வாழ்விலும் இயேசு பெரிய காரியங்களைச் செய்து தம்மை உயர்ந்திருக்கும் தேவனாக வெளிபடுத்துவார். எனவே அவரை மட்டுமே நம்புங்கள்.

இயேசுவாகிய தீர்க்கதரிசியை மட்டும் பின்தொடருங்கள். வேறு தீர்க்கதரிசிகளை பிந்தொடராதிருங்கள். இவர் மட்டுமே வார்த்தையயும், ஜீவனையும் தந்தவர். உன்னை ஆசீர்வதிப்பவரும் அவரே.

கர்த்தாவே உம் மகனை பிரதான தீர்க்கதரிசியாக அனுப்பி எங்களை மீட்டுகொண்டீரே. உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME