அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது

அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

saying might be fulfilled which He spoke,Of those whom You gave Me I have lost none. (John 18:9)

Number 31:49; 1 Samuel 22:23; Jeremiah 23:4; Zechariah 13:7; Matthew 1:22; Matthew 26:56; John 6:39; John 10:28; John 17:6; Act 8:32.

நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. (யோவான் 18:9)

எண்ணாகமம் 31:49; 1சாமுவேல் 22:23; எரேமியா 23:4; சகரியா 13:7; மத்தேயு 1:22; மத்தேயு 26:56; யோவான் 6:39; யோவான் 10:28; யோவான் 17:6; அப்போஸ்தலர் 8:32.

வசனம் நிறைவேறும்:

ஏசாயா 55:11 ல் என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ள வாக்கியத்தை நினைவுகூருவோம். மத்தேயு 5:17,18 ல் கர்த்தராகிய இயேசு நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று கூறுகின்றார். பரிசுத்த ஆவியானவரும் தேவனுடைய வாக்குகள் நிறைவேறும்படியாகவே இந்த உலகத்தில் இருக்கும் சபைக்குள் கிரியை நடப்பிக்கின்றார்.

இயேசுவைக் குறித்து கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களெல்லாம், நியாய பிரமாணங்களெல்லாம், எழுத்தேடுகள் எல்லாம் நான்கு காலங்களில் நிறைவேறுதல் அடைகின்றன. இயேசு தோன்றுவதற்கு முன் அவரை குறித்து கூறியவைகளில் சில நிறைவேறின. இயேசுவின் காலத்தில் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின. இயேசுவுக்கு பின் ஆதி சபைகளிலிருந்து இதுவரையிலும் நிறைவேறி வருகின்றன. கடைசி காலத்தில் நிறைவேறபோகிறவகள் நிறைவேறுதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

நிறைவேறுதலுக்கான வாக்கியங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. அந்த வாக்குகளில் ஜீவன், ஆற்றல், அதிகாரம் உள்ளது. அவைகளை எதிர்த்து ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியாது. அவைகள் எந்த காலத்துக்காக வைக்கப்பட்டுள்ளதோ அக்காலத்தில் அவைகள் நிறைவேறியே தீரும்.

நமக்கு வாக்குகளாய், வாக்குத்தத்தங்களாய் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஒரு சரித்திரம் இருக்கின்றது. அந்த வாக்குகளை நம் வாழ்வில் நமக்காக சொந்தமாக்கிக் கொள்ளும்போது அது நமக்குள் ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தும். ஆகையினால் கர்த்தருடைய வாக்குகளை நாம் அசட்டை செய்யாமல் அதன் சத்தியம் சரித்திரமாக பரிணமிக்க விசுவாசித்து முன்னேறுவோமாக.

கிறிஸ்துவிலே நிறைவேறிய வாக்குகள், கிறிஸ்துவின் மூலம் நிறைவேறுகிற வாக்குகள் ஆகிய எதுவாயினும் அது நம்மூலம் நிறைவேறும்படியாக நாம் அவருடைய வார்த்தையின் நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தையைக் கொண்டு அஸ்திபாரமிடு. அவருடைய வார்த்தையைக் கொண்டு கட்டி எழுப்பு. அவருடைய வார்த்தையைக் கொண்டு சமாதானத்துடனும், மகிழ்வுடனும் வாழ்வாயாக.

ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் கர்த்தர் நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். எரேமியா 6:6-12.

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. ஆபகூக் 2:3.

ADD YOUR COMMENT

Powered By Indic IME