அவரைப் பிடித்து வரும்படி சேவகரை அனுப்பினார்கள்.
Pharisees heard the crowd murmuring, sent officers to take Him. (John 7:32)
Jn11:47,48; Jn12:19; Jn15:20; Jn18:3; Mt12:23,24; Mt23:13; Mk10:2; Lk22:52,53; Act5:26.
ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள்.
(யோவான் 7:32)
யோவான் 11:47,48; யோவான் 12:19; யோவான் 15:20; யோவான் 18:3; மத்தேயு 12:23,24; மத்தேயு 23:13; மாற்கு 10:2; லூக்கா 22:52,53; அப்போஸ்தலர் 5:26.
பரிசேயரின் தந்திரம்:
ஜனங்கள் இயேசுவை குறித்து அபிப்பிராயப்பேதம் கொண்டு முறுமுறுத்தார்கள். அவர்களின் பேச்சுக்கள் பரிசேயருக்கு தெரிவிக்கப்ப்ட்டது. அப்பொழுது பரிசேயர் “இயேசுவை பின்பற்றிய ஜனங்களுக்குள் பிரிவினையுண்டாகியுள்ளது. இந்த வேளையை பயன்படுத்தி இயேசுவை பிடித்துக்கொள்ளலாம்: என்று யோசனை செய்து இயேசுவை பிடித்துவர சேவகர்களை அனுப்பினர்.
கிறிஸ்தவர்கள் ஐக்கியமாயிருப்பதற்கு அழைக்கப்பட்டவர்கள்.
நிர்வாகரீதியாக சபைகள் பிரிந்திருந்து பற்பல பெயர்பலகைகளை உடையவர்களாயிருந்தாலும் சரீரத்திலும், ஆன்மாவிலும், ஆவியிலும் ஐக்கியமாயிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் எதிராளிகள் உள் நுழைந்து யாவரையும் கொள்ளையாடுவர்.
குடும்பம் என்பது மாம்சத்தில் மாம்சமாயும், உணர்வில் உணர்வாயும், உணர்ச்சியில் உணர்ச்சியாயும், இரத்தத்தில் இரத்தமாயும் இணைந்திருப்பதற்கு அழைக்கபட்டதாகும்.
இதை விடுத்து புருஷன் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், பிள்ளைகள் ஒருபக்கமாய் பற்பல எண்ணங்களை கொண்டிருக்குமானால் குடும்பத்தில் சமாதானம் அற்று பிரிவினையின் பாதைக்கு நேராக ஓடும்.
கிறிஸ்தவ குடும்பத்தில் புருஷனே தலையாயிருக்கிறார்.
தலையின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு நடக்கிற மனைவி, பிள்ளைகளாய் இருந்தால் மட்டுமே குடும்பம் ஒரே நேர்கோட்டில் செல்லும். பலகுடும்பங்களின் வருவாய் இழப்புக்கு காரணம் ஆளாளுக்கு செலவு செய்ய விரும்புவதினாலேயாகும்.
இது கிறிஸ்தவ குடும்பமல்ல. தலையானது மரிப்பது வரையிலும் தலைக்கு கட்டுபட்டு வாழ்வதினால் மட்டுமே பாம்பு குடும்பமாகிய ஏதேனில் நுழையாமலிருக்க தகும்.
கர்த்தாவே எங்களை பரிசேயர்களின், பாம்பின், எதிராளிகளின் தந்திரங்களுக்கு விலக்கி காத்து உம் குமாரனில் ஒன்றித்து வாழ உம் ஆவியை கொண்டு உதவி செய்யும்.