அவருடைய கற்பனையாயிருக்கிறது.
we should believe on the name of His Son Jesus Christ and love one another,as He gave us[fn] commandment. (1John 3:23)
Mark 9:7; John 6:29; John 14:1; John 17:3; Acts 16:31; 1Timothy 1:15; Deu 18:15-19; Psalms 2:12.
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. (1 யோவான் 3:23)
மாற்கு 9:7; யோவான் 6:29; யோவான் 14:1; யோவான் 17:3; அப்போஸ்தலர் 16:31; 1தீமோத்தேயு 1:15; உபாகமம் 18:15-19; சங்கீதம் 2:12.
அவருடைய கற்பனை.
அப்போஸ்தலனாகிய யோவான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கற்பனையைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். ஆதி கற்பனைகள் உண்டு. அவைகள் பழைய கற்பனைகளாகிப்போனது. அவைகள் பயனற்றதினால் பழமையாகிப் போகவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவைகளை நிறைவேற்றியதினால் அவைகள் பழமையாய் போயிற்று. பிந்திய கற்பனை உண்டு. அவைகள் புதிய கற்பனையாகும். இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் பலவிதமான கட்டளைகள் காணப்படுகின்றன. இங்குள்ள கற்பனைகளோ இயேசுவின் ஜீவிதத்தையும் உபதேசத்தையும் சார்ந்த ஆதி கற்பனைகளாகும்.
முதலாவது, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாயிருக்க வேண்டும் என்பதாகும். அவரை பற்றிக்கொண்டு வாழ வேண்டும். அவரை முழு இருதயத்தோடும் பின்பற்ற வேண்டும். இயேசு கிறிஸ்துவை விட்டு விட்டு பிரமாணத்தை பின்பற்றிய இஸ்ராயேலர்களால் ஜெயவாழ்வு வாழ முடியவில்லை. ஆகவே எல்லா கட்டளைகளுக்கும் அடிப்படையானதும் அவசியமானதுமான கட்டளை கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதேயாகும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசம் வைப்பதற்காகவே விவிலியம் எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது, இயேசு கிறிஸ்து கட்டளையிட்டதும், பின்பற்றியதுமான ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்ற காட்டளையாகும். தோற்றத்தில், உருவத்தில், கலாச்சாரத்தில், மொழியில், இனத்தில், ஜாதிகளில், நாடுகளில் பிரிந்திருக்கக்கூடும். ஆனால் ஒருவரிலொருவர் அன்புகூருவதில், உதவுவதில், பேதமை கொள்ளாதிருத்தலில், வேறுபாடு கொள்ளாதிருத்தலில் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும். படிப்பு, செல்வம், பதவிகளின் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உளமார அன்பில் இணைந்துக் காணப்பட வேண்டும். பிரிவினைகளில் இணைந்து வாழும் மனோபக்குவம் கிறிஸ்துவின்மேல் கொள்ளுகிற விசுவாசத்தின் அடிப்படையினால் உண்டாகின்றது. கிறிஸ்து இல்லாத அன்புகள் போட்டிகளையும், பொறாமைகளையும் காண்பிக்கும். அவரின் கற்பனை நமது வாழ்வின் விளக்காகும்.
கேள்வி. அவரின் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்கள் வேறுபாடு காண்பிப்பதின் காரணம் என்ன?.
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். எபேசியர் 5:1-7.