அவரது கற்பனைகளைக்கைக்கொள்ளுகிறவர்கள் அவரை அறிந்துள்ளார்கள்.

And hereby we do know that we know him, if we keep his commandments. (1John 2 :3)

1John 3:22,23; 1John 5:3; John 14:15,21-24; John 15:10,14; 1Thes 4:1,2; Revelation 22:14; Psalms 119:6,32.

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். (1 யோவான் 2:3)

1யோவான் 3:22,23; 1யோவான் 5:3; யோவான் 14:15,21-24; யோவான் 15:10,14; 1தெசலோனிக்கேயர் 4:1,2; வெளி 22:14; சங்கீதம் 119:6,32.

அவரை அறிந்தவர் யார்?

கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் இயேசுவை அறிவார்கள். இஸ்ராயேலர்கள் மோசேயின் பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களாகவும், கைக்கொள்ளுகிறவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டனர். இவர்களின் இத்தகைய சிந்தனையை முன்னிறுத்தியே யோவான் இவ்வாறு கூறுகின்றார். தேவனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளை மோசே இஸ்ராயேல் ஜனங்களுக்குக் கொடுத்தார். அந்த கட்டளைகள் இஸ்ராயேல் ஜனங்களை தேவனுடைய ஜனங்களாக விளங்கச் செய்தது. தேவனுடைய சொந்த ஜனங்களாக அறியப்பட்ட இஸ்ராயேலர் உலகத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் பேர்பெற்றவர்களாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இந்த பிரமாணங்களின் நிறைவேறுதலாக வந்த இயேசு கிறிஸ்துவை இஸ்ராயேலர் ஏற்றுக்கொண்டு வாழ்வது எல்லாவற்றிலும் சிறப்பானதாகும்.

பிரமாணங்களின் வழியாக வந்த ஜனங்கள் அதே பிரமாணங்களின் வழியாக வந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், பிரமாணங்கள் தேவனுடைய வெளிச்சத்தைக் கொடுத்திருந்தது. பிரமாணங்கள் தேவனுடைய வழியை – மார்க்கத்தைக் காட்டியிருந்தது. பிரமாணங்கள் வரப்போகிற மேசியாவை முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆகவே பிரமாணங்களின் வெளிச்சத்தில் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று அறிந்து விசுவாசிக்க வேண்டும்.

தேவனுடைய வாக்கியங்களை கற்றுக்கொள்வதினாலும், கைக்கொள்ள முயற்சிப்பதினாலும் பிரமாணங்களினால் நிறைவேற்ற முடியாத மீட்பை கொண்டு வந்துள்ள இயேசுவை அறிந்து கொள்ள முடிகின்றது. பிரமாணங்கள் தங்களை பாவிகள் என்று சுட்டிக்காட்டும் அதே வேளையில் இயேசுவை நோக்கிப்பார்க்கவும் போதிக்கின்றது. பிரமாணமாகிய என்னை நீ பின்பற்றி ஜெயம் பெற முடியாது. என்னால் உனக்கு தண்டனை மட்டுமே தரமுடியும். உன்னை என் கைக்கு தப்புவிக்க இயேசு கிறிஸ்துவால் மட்டுமே இயலும். ஆகையினால் இயேசுவை நம்பி பற்றிக்கொள் என்று போதிக்கின்றது.

பிரமாணம் நம்மை பாவி என்றும் சொல்லும், பிரமாணம் இயேசுவை இரட்சகர் என்றும் சொல்லும். ஆகையினால் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் இயேசுவை அறிகின்றார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை கைக்கொள்ளுகிறவர் மட்டுமே இயேசுவையும், அவரின் தந்தையையும் அறிகிறான். கிறிஸ்தவம் என்பது சடங்குகளினால் அல்ல, கட்டளைகளினாலும், உபதேசங்களினாலும் பொதியப்பட்டுள்ளதை நாம் கவனித்தாக வேண்டும். மீட்புக்கு பிரமாணம் அவசியமே. பிரமாணம் என்னை பாவியாக்கி இயேசுவின் மேல் விசுவாசம் வைக்க தூண்டுகின்றது. நான் விசுவாசத்து மீட்பை பெற்றேன். மீட்பை பெற்ற நான் ஆவியின் பிரமாணத்துக்கு கட்டுபட தூண்டபடுகின்றேன்.

அவரை அறிந்தவர்கள்…..
பிரமாணங்களையும், கட்டளைகளையும் புறந்தள்ளமாட்டார்கள்…..
பிரமாணங்களை நிறைவேற்றிய இயேசுவின் மேல் ஆழமான நம்பிக்கை வைப்பார்கள்…
ஒருவரிலொருவர் அன்புடையவர்களாயிருப்பார்கள்…

சில கேள்விகள்…
மோசேயின் பிரமாணங்கள் இஸ்ராயேலருக்கு மட்டுமென்றால் அவைகளோடு இணைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் யாருக்கானவைகளாகும்?

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில், உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். உபாகமம். 4:7-10.

ADD YOUR COMMENT

Powered By Indic IME