அவன் இவன்தானா? இவனானால் இப்பொழுது எப்படி பார்வையடைந்தான்?
Is this your son, who you say was born blind? How then does he now see?(John 9:19)
Acts3:10; Acts4:14.
அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். (யோவான் 9:19)
அப்போஸ்தலர் 3:10; அப்போஸ்தலர் 4:14.
எதையும் நிரூபிக்கவேண்டும் என்ற மனப்பான்மை?
சமயதலைவர்கள் இயேசுகிறிஸ்து குருடனுக்கு செய்த நன்மையைக் குறித்து குருடனின் பெற்றோர்கள் நிரூபித்தாகவேண்டும் என்று வாதிடுகின்றனர். இவர்கள் மூன்று கேள்விகளை எழுப்புகின்றனர். இவன் உங்களுடைய மகன்தானா? இவன் உங்கள் மகனானால் குருடனாகத்தான் பிறந்தானா? இவன் இப்பொழுது எப்படி பார்வையடைந்தான்? இக்காலத்திலும் இயேசுவின் அற்புதங்களை தத்ரூபமாக நிரூபிக்க வேண்டும் என்று கூறுகின்ற பெருந்தலைவர்கள் இருக்கின்றார்கள்.
தேவன் வலிய வந்து செய்கின்ற அற்புதங்களையும், நமது விசுவாசத்தின் வழியாக நடக்கின்ற அற்புதங்களையும் நடந்தேறினபின்பு இனியொருதடவை நிரூபித்து பார்க்க இயலாது. யார் அதை அனுபவிக்கின்றார்களோ அவர்களே அற்புதங்களின் உயிருள்ள சாட்சிகள். அந்த சாட்சிகளே உண்மை நிரூபணங்களாயுள்ளனர். நம்மில் தேவன் செய்துள்ள அற்புதங்களுக்கு நாமே சாட்சிகளாயுள்ளோம். நம்புகிறவர்களுக்கு சாட்சியமாயிருப்போம். நம்பாதவர்களைவிட்டு விலகி கொள்வோம்.
நம்மில் தேவன் செய்யும் கிரியைகள் உயிருள்ளவைகளாயுள்ளன. எனவே நாம் உயிர்சாட்சிகள். நிரூபித்துகாட்டு என்கிறவர்களோடு நாம் போராடவேண்டாம். பொறுத்திருப்போம். விசுவாசத்தில் நிலைத்திருப்போம். கர்த்தர் நம்மில் அற்புதம் செய்வார்.
கர்த்தாவே உம் கிரியைகளை பரீட்சித்து பார்ப்பதற்கல்ல, பட்சமாய் நின்று ஏற்றுகொள்வதையே விரும்புகின்றீர். எனவே நாங்கள் சாட்சிகளாயிருக்க பெலம் தாரும்.