அதிகாரிகள் அவரில் விசுவாசம் வைத்தனர். பயத்தினால் அறிக்கையிடவில்லை

அதிகாரிகள் அவரில் விசுவாசம் வைத்தனர். பயத்தினால் அறிக்கையிடவில்லை.

among the rulers many believed in Him, but because of the Pharisees they did not confess Him.

John7:13; John9:22,34; John16:2; Matthew26:69-75; Luke6:22; Acts 5:41,42; Romans10:9-13; 1Peter 4:12-16; Proverb 29:25; Isaiah 51:7; Isaiah 57:11; Isaiah 66:5.

ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். (யோவான் 12:42)

யோவான் 7:13; யோவான் 9:22,34; யோவான் 16:2; மத்தேயு 26:69-75; லூக்கா 6:22; அப்போஸ்தலர் 5:41,42; ரோமர் 10:9-13; 1பேதுரு 4:12-16; நீதிமொழிகள் 29:25; ஏசாயா 51:7; ஏசாயா 57:11; ஏசாயா 66:5

ரகசிய கிறிஸ்தவரா?
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாம்சத்திலே வெளிப்பட்டார். மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார். மாம்சத்திலே பாடுகளைப்பட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் என்று நாம் நம்பினாலும் மாம்சத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டார் என்றும் நம்ப வேண்டும். அவரை பின்பற்றுகிறவர்களும் ஆவியில் புதுப்பிக்கப்பட்டாலும் மாம்சத்திலேயே இரட்சிக்கப்பட வேண்டும். மாம்சத்திலே இரட்சிக்கப்பட்டவர் தனது மீட்பையும், புது வாழ்வையும் பகிரங்கமாக அறிக்கையிட வேண்டும்.

இயேசுகிறிஸ்துவை பின்பற்றிய பெரும் ஜனக்கூட்டத்தில் பலர் சமுதாயத்தில் முன்தங்கியவர்களும், உலகத்தின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு பயந்தவர்களும் இயேசுவை கர்த்தர் என்றும், ஆண்டவர் என்றும், மீட்பர் என்றும், மேசியா என்றும் பகிரங்கமாக அறிக்கையிடாமல் மனிதகூட்டங்களுக்குள்ளும், பாவங்களுக்குள்ளும், கவுரவம் மதிப்புமிக்க செல்வாக்குக்குள்ளும் மறைந்து வாழ்ந்தார்கள். அவர்களைபோலவே ஆதிதிருச்சபை காலங்களிலிருந்து இந்த நாள்வரையிலும் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்று திருவிருந்தில் பங்கு கொண்டுள்ள பல மதிப்புமிக்க தேவ மனிதர்கள், விசுவாசிகள் தங்களை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் என்று பகிரங்கமாக அறிக்கையிடாமல் ரகசிய கிறிஸ்தவர்களாக வாழ்வதாக கூறிக்கொள்கின்றனர்.

மனிதர் முன்பாக, அதிகாரிகள் முன்பாக, உறவுகள் முன்பாக, அரசு முன்பாக தன்னை கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவன் என்று அறிக்கையிடுகிறவன் மட்டுமே தேவ இராஜ்ஜியத்துக்குரியவனாவான். துன்பங்களை கண்டு பயந்தும், ஆஸ்தியில் பங்கு கிடைக்காது என்று அங்கலாய்த்தும், உபகார சம்பளம் மற்றும் அரசு சார்ந்தவைகள் கிடைக்காது என்று ஏங்கியும், உறவுகளை விட்டு விலகிவர இயலாமலும் உள்ளவர்கள் சரீரபிரகாரமாக – எழுத்துபூர்வமாக இந்துக்களாகவும், ஆவிபூர்வமாக கிறிஸ்தவர்களாகவும் இருந்து மாய்மால வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

இரட்சிக்கப்பட்டேன் என்று சொல்லுகிறவர்களும், அபிஷேகம் பெற்றேன் என்று சொல்லுகிறவர்களும் பகிரங்கமாக – வெளிப்படையாக இயேசுவை தெய்வமாக அறிக்கையிட்டு தங்களை கிறிஸ்துவின் பிள்ளைகளாக அடையாளப்படுத்திக்கொள்ளாவிட்டால் அதற்கேற்ற தண்டனை உண்டு என்பதை பயபக்தியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனங்களை கிறிஸ்துவுக்குள் சரீரபிரகாரமாகவும், ஆவிபூர்வமாகவும் வழிநடத்தாத ஊழியக்காரனுக்கும் அதற்கேற்ற தண்டனை உண்டு.

பாவவிலக்கமின்றேல் மீட்பில்லை. அறிக்கையின்றேல் ராஜ்யமில்லை.

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:16-19.

ADD YOUR COMMENT

Powered By Indic IME