அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள். லாசருவைக் காணும்படியாக வந்தார்கள்

அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள். லாசருவைக் காணும்படியாக வந்தார்கள்.

Now a great many Jews knew that He was there; and they came,to see Lazarus,whom He had raised from the dead. (John 12:9)

Jn11:43-45; Act3:10-11; Act4:14; Heb12:3; 1Cor15:35-49; Gen35:1-6.

அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். (யோவான் 12:9)

யோவான் 11:43-45; அப்போஸ்தலர் 3:10-11; அப்போஸ்தலர் 4:14; எபிரெயர் 12:3; 1கொரிந்தியர் 15:35-49; ஆதியாகமம் 35:1-6.

சாட்சியான லாசரு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் லாசரு மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டான் என்பதைக் குறித்த செய்தி வெகு வேகமாக பல கிராமங்கள், பட்டணங்களில் பரவியது. இயேசுவைக் குறித்து ஏற்கனவே யாவரும் அறிந்திருந்தார்கள். ஆனால் மரித்தவன் பிழைத்திருந்ததை இதுவரை கண்டிராத காரணத்தினால் திரளான ஜனங்கள் லாசருவை காணும்படியாக இயேசுவிடம் வந்தார்கள். இந்த கூட்டம் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை பின்வரும் நாட்களில் நாம் தியானிக்கலாம்.
இயேசு உயிரோடே எழுப்புகிறவர் என்பதில் சந்தேகமில்லை. உயிர்த்தெழுதல் நடக்கும் காலத்தில் உயிரோடே எழுப்புவதற்கு பதில், முன்னதாகவே உயிர் பெற்று எழும்பியவரின் சரீரம், நடைமுறை, பழக்க வழக்கம், பேச்சு யாவும் எப்படி உள்ளது என்று அறிய விரும்பினார்கள்.

உயிரோடெழும்புகிறவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதைக்குறித்து 1கொரிந்தியர் 15:35-49 – ல் சொல்லப்பட்டுள்ளதை தியானிக்கவும். லாசரு முன் எப்படி இருந்தானோ அப்படியே இருந்திருக்க கூடும். முன்னிருந்த அதே சரீரத்தையே அவன் மறுபடியும் பெற்றிருந்தான். செத்து – அழுகி நாற்றமெடுத்த சரீரம் ஜீவனுள்ளதாய் மரணத்துக்கு முன்னிருந்தது போலவே காணப்பட்டது. முன்னது போலவே இயேசுவோடு இணைந்து காணப்பட்டார்.

நம்மில் அற்புதங்களும், அடையாளங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நடக்கும் போது மட்டுமே நம்மில் உள்ள சாட்சியங்களை தேவனை அறியாதவர்களும், விசுவாசியாதவர்களும் தேடுவார்கள். அப்பொழுதுதான் நாம் அவரின் சாட்சியங்களாவோம்.

இந்திய திருச்சபைகளில் , ஊழியங்களிடையில், விசுவாசிகளிடையில் கிறிஸ்துவின் அற்புதங்களும், அடையாளங்களும் நடப்பதை இந்திய மக்கள் அறியும் போதுதான் கிறிஸ்தவத்தை குறித்த அறிவும், திகிலும், பயமும், பக்தியும் சாட்சியங்களும் உண்டாகும். இந்திய சபைகளிலிருந்த கிறிஸ்துவின் சாட்சியங்கள் வெளிப்படாதிருக்கும் வரையிலும் அவர்கள் சபைகளை உடைப்பார்கள், ஊழியர்களைக் கொல்லுவார்கள். விசுவாசிகளை உபத்திரவப்படுத்துவார்கள். நிந்தைகளையும், அவ கீர்த்திகளையும் சுமத்துவார்கள்.

நம்மில், நமது சபைகளில் அற்புதங்களும், அடையாளங்களும், பலத்த செய்கைகளும் உண்டாக பிரார்த்திப்போம்
சாட்சியமே மீட்சி

பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள். ஆதியாகமம் 35:5

ADD YOUR COMMENT

Powered By Indic IME