அந்தக் கல்லறை சமீபமாயிருந்ததினால் அவ்விடத்தில் அவரை வைத்தார்கள்

அந்தக் கல்லறை சமீபமாயிருந்ததினால் அவ்விடத்தில் அவரை வைத்தார்கள்.

So there they laid Jesus,because of Jews Preparation Day,for tomb was nearby. (John 19:42)

Psalms 22:15; Isaiah 53:9; 2Chronicles 16:14; Matthew 12:40; Matthew 27:59,60; Mark 15:46,47; Luke 23:53; Acts 13:29; 1Corinthians 15:4.

யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். (யோவான் 19:42)

சங்கீதம் 22:15; ஏசாயா 53:9; 2நாளாகமம் 16:14; மத்தேயு 12:40; மத்தேயு 27:59,60; மாற்கு 15:46,47; லூக்கா 23:53; அப்போஸ்தலர் 13:29; 1கொரிந்தியர் 15:4.

கல்லறையில் இயேசு 
பரலோக கருவறையில் தேவ குமாரனாக பிதாவின் மடியில் செல்லப்பிள்ளையாக வாழ்ந்துகொண்டிருந்த இயேசுவாகிய வார்த்தை மாம்சமாகி ஸ்திரீயின் கருவறையில் வந்து அமைந்தது. ஸ்திரீயின் கருவறையில் இருந்து வெளிப்பட்ட இயேசுவாகிய மனுமகன் பூலோகத்தில் வாழ்ந்து சாதனைகள் செய்து கொலை செய்யப்பட்டு பூமியின் கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது இயேசு பூமியில் வயிற்றில் அமைந்துள்ளார். 
தேவகுமாரன் பூமியின் கருவறையில் வைக்கப்பட்ட இயலுமா? இந்த கேள்வியை கேட்கும் போது கல்லறை குறித்தும் மரணம் குறித்தும் ஒரு சில உண்மைகளை தேவன் தன் இருதயத்தில் கொண்டுள்ளதை நாம் அறிவது நல்லது. 

முதலாவது, எல்லா மனிதரும் – மனிதராகப் பிறந்த எவரும் ரிஷியானாலும் முனிவர்களானாலும் தேவர்களானாலும்  அனைவரும் மரணத்தின் வழியாக பூமியின் கருவறைக்கு சென்றே ஆகவேண்டும் என்பதை அறிவிக்கின்றார். ஒருவரும் இந்த நியமத்திலிருந்து தப்ப முடியாது. 

இரண்டாவது கல்லறை என்பது இறந்த உடல்களை கொண்டுள்ள தீட்டானதும், அருவருப்பானதும், நாற்றம் மிகுந்ததுமான ஓரிடம் என்பதை அறிவிக்கிறது. பிறந்தபோது உண்டான உடல் அழகானது.  ஆனால் மரித்த பின்பு உண்டான பூதவுடல் அழிவுக்கு வைக்கப்படுகிறது. பாவத்தின் கொடுமை இதுவே. ருசிக்க இனிமையாக காணப்பட்ட பாவம் முடிவில் கொடிய விஷமாக மாறியது. 

மூன்றாவது கல்லறை நிரந்தரமான இடம் அல்ல, ஒரு தற்காலிக புகலிடம். மரித்தவர்களை தன்னுள் கொண்டுள்ள இடம். இந்த கல்லறைக்கு முடிவு உண்டாக்கப்படும். அது இயேசு கிறிஸ்து உயிர்ப்பதினாலும், அவரை விசுவாசிக்கிறவர்களை உயிர்ப்பிப்பதினாலும் முடிவு உண்டாக்கப்படும். 

நான்காவதாக நாற்றத்தை அனுபவிக்காதிருப்பதற்காக மூடப்பட்ட கல்லறை, மகிமை பிரதிபலிக்க திறக்கப்படும் என்பதை காட்டுகிறது. 
இயேசுகிறிஸ்துவின் சரீரம் கெட்டு அழிந்து நாறி சிதிலம் அடைவதற்காக கல்லறைக்குள் வைக்கப்படவில்லை. மோசேயின் சரீரத்தை மறுரூபப்படுத்த பத்திரப்படுத்தின தேவன் தமது மகனின் சரீரத்தை உயிர்ப்பிக்கப்படுவதற்காக பத்திரப்படுத்தி உள்ளார். எனவே இந்த கல்லறை தேவனின் ஆளுகைக்குட்பட்ட கல்லறை. அறிந்தோ அறியாமலோ ஆட்சியாளர்கள் இயேசுவின் சரீரத்தை மூடியிருந்த கல்லை முத்திரையிட்டு பத்திரப்படுத்தினார்கள். இதுவும் தேவனுடைய ஏற்பாடே.  ஜீவனை ஒப்படைத்த இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்து பத்திரப்படுத்தினார் தேவன். தாம் ஏற்படுத்திய கல்லறையிலே தமது மகனையே வைக்க வேண்டியதாகிவிட்டது. இது நமது பாவத்தால்.

ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.  அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக் கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். 
ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,  தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான் ; வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். யோபு 14:1-2, 5-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME