அந்த ஜீவன் வெளிப்பட்டது
The life was manifested, and we have seen, and bear witness, and declare to you that eternal life. (1 John 1:2)
1John 3:5,8; Romans 16:25,26; 1 Timothy 3:16; 2 Timothy 1:10; Titus 1:3,4; Proverb 8:22-30.
அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்தும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தߠίமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (1 யோவான் 1:2)
1யோவான் 3:5,8; ரோமர் 16:25,26; 1 தீமோத்தேயு 3:16; 2 தீமோத்தேயு 1:10; தீத்து 1:3,4; நீதிமொழிகள் 8:22-30.
வெளிப்பட்ட ஜீவன் இயேசு.
காது வழியாக கேட்கப்பட்ட வார்த்தையாக அல்ல, தொட்டு அனுபவித்த உயிருள்ள வார்த்தையாக அனுபவித்த யோவான் அவரை உயிராக – ஜீவனாக குறிப்பிடுகின்றார். இயேசு கிறிஸ்து ஜீவனாக வெளிப்பட்டார். அதாவது வார்த்தை ஜீவனாக – உயிராக வெளிப்பட்டது என்கிறார். இது உருவாக்கப்பட்ட ஜீவன் அல்ல, பிரத்தியட்சமான ஜீவன். தேவனிடமிருந்து பூமியில் தோன்றின ஜீவன். காணமுடியாததாகவும், கேட்ககூடியதாகவும் இருந்த வார்த்தை காணக்கூடியதாகவும், தொட்டு உணரக்கூடியதாகவும் வெளிப்பட்டது. ஜீவன் அல்லது உயிரை நாம் காணமுடியாது. ஒரு சரீரம் இயங்குவதினாலேயே ஜீவன் உண்டு என்பதை அறிகின்றோம். இயேசுவில் இருந்த ஜீவன் தேவனால் கொடுக்கப்பட்ட , வெளிப்படுத்தப்பட்ட ஜீவன் என்பதற்குரிய ஒரே அடையாளம் இயேசுகிறிஸ்து பிதாவுக்கு ஏற்றவராகவே வாழ்ந்தார் – செயல்பட்டார் என்பதாகும்.
இந்த ஜீவன் பிதாவிடத்திலிருந்தது ஆகும். பிதாவினிடத்திலிருந்து வந்தது ஆகும். எங்களிடம் வெளிப்பட்டதுமாகும். இது நித்தியமாயிருக்கிற நித்திய ஜீவன். இந்த ஜீவனை நாங்கள் கண்டு அனுபவித்து இந்த ஜீவன் குறித்து சாட்சிக் கொடுக்கிறோம். நீங்களும் இந்த ஜீவனை பின்தொடர வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.
கர்த்தராகிய இயேசுவை ஒரு சாதாரண யூத மனிதனாகவோ, ரபீயாகவோ காணாமல் அவரை மறு உலக வாழ்வின் ஜீவனாக காண்கிறார். இயேசுவாகிய ஜீவனை இவ்வுலகில் பெற்று அனுபவிக்கிறவர்கள் மாத்திரமே மறு உலகிலும் ஜீவன் உடையவர்களாக காணப்படுவர். இயேசுவே நித்திய ஜீவனும், நித்தியத்துக்குரியவருமாவார். பூமிக்குரிய வாழ்வுக்கு காற்று அவசியமாயிருப்பதைபோல மறு உலக வாழ்வுக்கு இயேசுவாகிய ஜீவன் அவசியமாயிருக்கிறார்.
இந்த வெளிபட்ட ஜீவனாகிய இயேசுகிறிஸ்துவினால்….
மரணத்திலிருந்து நீங்கி ஜீவனுக்குட்படுகின்றோம்.
மரித்தாலும் பிழைப்போம் என்ற நம்பிக்கை கிடைக்கின்றது.
இந்த கூடாரத்தைவிட்டு போகவும் ஆயத்தபடுகின்றோம்.
மரணத்தையே சுமந்து மரணவாசனையை கொண்டிருந்தாலும் ஜீவனையும் சுமந்து ஜீவ வாசனையுடையவர்களாய் இருக்கின்றோம்.
அவமானங்களை – நிந்தைகளை மனதார சகிக்கின்றோம்.
இயேசுவே வார்த்தை. இயேசுவே ஜீவன். இயேசுவே மறு உலகம்.இயேசுவே நித்தியம். அவரில்லாமல் நாம் வாழும வாழ்க்கை யாவும் உயிரில்லாத சடமேயாகும்.
ஜீவன் உருவாக்கப்படுவதா கொடுக்கப்படுவதா?
தேவனிடமிருந்து வரும் ஜீவன் பெற இயேசு மட்டும் தான் வழியா?
ஜீவன் பெற்றவர் பாவம் செய்வாரா?
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1யோவான் 5:11-13.